தமிழகத்தில், 'டாஸ்மாக்' மதுக் கடைகள் வாயிலாக, ஒவ்வொரு நாளும், ௧௦௦ கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில், இந்த விற்பனை இரு மடங்காக அதிகரிக்கிறது.
சமீபத்தில், சுதந்திர தினத்தை ஒட்டி மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், அதற்கு முந்தைய நாள், ௨௭௪ கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானதாக, பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன.டாஸ்மாக் மதுக் கடைகளில் தினமும், ௧௨ பாட்டில்கள் உடைய, ௭௦ ஆயிரம் பெட்டிகள் பீரும், ௪௮ குவார்ட்டர் பாட்டில்கள் இடம் பெற்ற, ௧.௮௦ லட்சம் பெட்டிகள் மதுபானங் களும் விற்பனையாகின்றன. பீர் பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட, ௧௦ ரூபாயை டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதலாக வசூலிக்கின்றனர்.
அதேநேரத்தில், குவார்ட்டர் பாட்டிலுக்கு, அதில் குறிப்பிட்டிருக்கும் விலையை விட கூடுதலாக, ௫ ரூபாய் வசூலிக்கின்றனர். சில இடங்களில், குவார்ட்டருக்கு, ௧௦ ரூபாய் வசூலிக்கும் அடாவடி ஊழியர்களும் உள்ளனர். டாஸ்மாக் நிறுவன கணக்குப்படி, தினமும் விற்பனையாகும் பீர் பாட்டில்கள் எண்ணிக்கை சராசரியாக, ௮.௪0 லட்சம், ஒவ்வொரு பாட்டிலுக்கும் ஊழியர்கள் கூடுதலாக, ௧௦ ரூபாய் வசூலிப்பதன் வாயிலாக, 8௪ லட்சம் ரூபாய் அடாவடியாக பிடுங்கப்படுகிறது.
அதேபோல, தினமும் விற்பனையாகும் குவார்ட்டர் மதுபாட்டில்கள் எண்ணிக்கை, ௮௬.௪௦ லட்சம். குவார்ட்டருக்கு, ௫ ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் வாயிலாக, தினமும், ௪.௩௨ கோடி ரூபாய், மது பிரியர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. மொத்தத்தில், நாள் ஒன்றுக்கு, பீர் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை வாயிலாக, மது அருந்துவோரிடம் இருந்து கூடுதலாக வசூலிக்கப்படும் தொகை கிட்டத்தட்ட, ௫.16 கோடி ரூபாய். இதை ஓராண்டிற்கு கணக்கிட்டால், 1,883 கோடி ரூபாய், 'குடி'மகன்களிடம் இருந்து அடாவடியாக பிடுங்கப்படுகிறது.
அப்படி பிடுங்கப்படும் பணமானது, ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் பிரித்துக் கொள்ளப்படுகிறது. இதுதவிர, மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தரும், 'ஆதாயமும்' அரசியல்
வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பைக்கு செல்கிறது. 'குடி'மகன்களிடம் பணத்தை பிடுங்கும் இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கேரள மாநிலம் போன்று, சரியான பணத்தை கொடுத்து, பில் பெற்று, அதன் வாயிலாக மது வாங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பதே, ஏராளமானோரின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment