மதியம் போனில் ஒரு அம்மணி
”சார் ’........................ ஹாலிடேஸ்’ல இருந்து பேசுறோம்”
“சொல்லுங்க”
“ம்ம்ம்ம்”
“இதுல நீங்க மெம்பர் ஆனா, இண்டியால இருக்கிற எங்களோட 34 ஹாலிடே ரிசாட்ல எதுல வேணா வருசத்துக்கு ஏழு நாள் தங்கலாம் சார்”
“சரிங்க”
”நீங்க போகலைனா, உங்க ஃப்ரெண்ட்ஸ்களுக்கு கூட இதைத் தரலாம்”
”சரிங்க”
”இது 25 வருச மெம்பர்ஷிப்”
“அடேங்கப்பா... 25 வருசம்னா........ 2046 வரைக்குமா”
இந்த அடேங்கப்பாவிலாச்சும் எதிர்முனை சுதாரிச்சிருக்கலாம்.
லேசாய் குரல் கம்மியது.
”ஆமாம் சார்.... வேற எதும் டௌட் இருக்கா சார்”
“ஒரே ஒரு டவுட்டுதானுங்க”
“கேளுங்க சார்”
“பணம் கட்டனும்ங்ளா!?”
ஜெர்க் ஆனது எனக்குத் தெரியல.... ஆனா ஆகாம இருந்திருக்காது
”ஒன்டைம் மெம்பர்சிப் அமௌண்ட் மட்டும்தான் சார்”
“என்னது பணம்ம்ம் க...ட்ட்....ட....னு...மா....”
“அது நீங்க ஈஎம்ஐல கூட கட்டலாம் சார்”
“எவ்ளோ”
“கிரடிட் கார்ட் பேமண்ட் உண்டுங்க”
“எவ்ளோங்ங்ங்ங்க”
”ஒன்டைம் பேமண்ட்னா 3.5 லட்சம்.... பட்.... ஈஎம்ஐ இருக்கு சார்.... அதனால ஈசிங்க.....”
”ஒரு நிமிசம்ங்க”
இப்பவாச்சும் மகராசி சுதாரிச்சிருக்கலாம்... ம்ம்ஹூம்
“மூன்ற லட்சத்துக்கு 2 ரூவா வட்டினு போட்டாக்கூட வருசத்துக்கு 84 நாலாயிரம், அதை ஏழு நாளுக்குனு போட்டா ஒரு நாளுக்கு பன்னெண்டாயிரம் வருது... ஆமா அந்த மூன்ற லட்சத்த எப்ப திருப்பித் தருவீங்க”
“சார்... ஒரு நிமிசம் சார்.... திரும்பக் கூப்டறேன் சார்”
ம்ம்ம்ம்ஹூம்ம்ம்ம்....
இப்ப வரைக்கும் மகராசி.... கூப்படலையே! கூப்படலையே!!
அவங்களும் எதாச்சும் இன்ஸ்டால்மெண்ட்ல வாங்கி ஈஎம்ஐ கட்டுறவங்களா, வேற எதாச்சுக்கும் வட்டி கட்டுறவங்களா இருப்பாங்களோ!?
போங்கம்மா... போங்க....!
வட்டி கட்டுறவனுக்கெல்லாம் போன் போட்டு உங்க நேரத்தை வீணாக்குறத விட்டுட்டு வேறே பொழப்ப பாருங்க...!
No comments:
Post a Comment