பொதுவாகவே நாம் பேசும் வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்று சொல்லுவார்கள்.அன்றாடம் நாம் பேசக்கூடிய வார்த்தைகள் தான் நம்முடைய வாழ்க்கையில் நிகழ்வாக நடக்கின்றது.
அப்படியிருக்கும்போது ஒருபோதும் தகாத வார்த்தைகளை நம் வாயிலிருந்து உச்சரிக்கவே கூடாது.
இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை இந்த நன்னாளில் கற்றுக்கொண்டோமே என்று நினைத்து இன்றிலிருந்து இந்த தவறுகளை செய்யமாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்
முதலில் வீடாக இருந்தாலும், தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், வேலை செய்யும் இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் நாம் பயன்படுத்தக் கூடாத வார்த்தை ‘இல்லை’.
இது இல்லை, அது இல்லை, வீட்டில் மளிகை பொருட்கள் இல்லை, காய்கறிகள் இல்லை, நகைகள் இல்லை, புது துணிமணிகள் இல்லை, என்று இப்படி இல்லை இல்லை என்ற வார்த்தையை சொல்லிக் கொண்டே இருந்தால், இருப்பதும் இல்லாமல் போய்விடும் என்று சொல்லப்பட்டுள்ளது.
விவரம் தெரிந்தவர்கள், வயதில் மூத்தவர்கள் வியாபாரம் செய்யக்கூடிய கடைகளுக்கு சென்று நாம் ஏதாவது ஒரு பொருளை கேட்போம்.
சில சமயங்களில் நாம் கேட்கக்கூடிய அந்த குறிப்பிட்ட பொருள், அந்த கடையில் இருக்காது. அப்போது அந்தக் கடைக்காரர் அந்தப் குறிப்பிட்ட பொருள் எங்களுடைய கடையில் இல்லை என்று சொல்லவே மாட்டார்கள்.
அந்த பொருள் குடோனில் இருக்கின்றது, அல்லது அந்தப் பொருளுக்கான ஆர்டரை செய்து இருக்கின்றோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் எடுத்துவர சொல்கின்றேன்.
இரண்டு நாட்களில் வந்துவிடும் வந்தவுடன் இந்த பொருளை உங்களுக்கு தருகின்றேன்.’ என்று தான் சொல்லுவார்கள்.
தவிர, எக்காரணத்தைக் கொண்டும் எங்க கடையில அந்த பொருள் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.
இனி உங்கள் வாயிலும் இல்லை என்ற சொல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான எல்லாமும் இருக்க வேண்டும் என்றால், இல்லை என்ற வார்த்தை உங்களிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக நமக்கு கோபம் வரும் போது அடிக்கடி நாம் பயன்படுத்தக்கூடிய வார்த்தை, அடிக்கடி கணவரையும் குழந்தைகளையும் திட்ட கூடிய வார்த்தை சனியனே மூதேவி.
இந்த இரண்டு வார்த்தைகளையும் எவர் ஒருவரும் உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களிடத்தில் கஷ்டமும் ஒட்டிக்கொள்ளும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.
சில வீடுகளில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றால் அந்த வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை பார்த்து ‘நீ எதற்கு பயன்படும் மாட்டாய்.
உன்னால் படிக்கவே முடியாது. வாழ்க்கையில் நீ கஷ்டப்பட தான் போகின்றாய்.’ என்ற வார்த்தைகளை சொல்லி திட்டுவார்கள். இந்த வார்த்தைகளை வைத்து எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை திட்டவே கூடாது.
நீ நன்றாக படித்தால் உன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று தான் அந்த குழந்தைகளுக்கு புத்திமதி சொல்ல வேண்டும்.
அன்றாடம் தினசரி வாழ்க்கையில் நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய மற்றொரு வார்த்தை அய்யோ, அய்யய்யோ! இந்த அயோ என்ற வார்த்தை எமதர்மருடைய மனைவியின் பெயராக சொல்லப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக உங்களுக்கு ஏதாவது நடந்து விட்டால் கூட அம்மா என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அய்யோ என்ற வார்த்தையை உச்சரிக்கதீர்கள். அடுத்தபடியாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இந்த பழக்கம் அதிகமாக இருக்கும். கோபத்தில் அடுத்தவர்களை திட்டும்போது அடுத்தவர்களுக்கு சாபம் கொடுத்து பேசுவார்கள்.
அடுத்தவர்களை சபிக்கும் குணம் உங்களிடம் இருந்தால் இன்றோடு அந்த குணத்தை தவிர்த்து விடுங்கள். அது நம்முடைய இல்லற வாழ்க்கைக்கு சரியானது அல்ல. வீட்டில் அடிக்கடி ‘சுத்தம் செய்து விட்டேன்.
சமையலறையை சுத்தமாக துடைத்து விட்டேன்.
வீட்டை சுத்தமாக துடைத்து விட்டேன். பூஜை அறையை சுத்தமாக துடைத்து விட்டேன்.
என்று சொல்லவே கூடாது.’
சுத்தமாக தொடைத்து விட்டேன் என்ற வார்த்தை வீட்டை துடைத்து எடுத்து விடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment