சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லுாரியில், ஒரு கதம்ப விழா நடந்தது. அங்கு சில விரும்பத்தகாத, தரக்குறைவான நிகழ்ச்சிகள் நடந்து விட்டனவாம்.
சுமார், 20 நிமிடங்களுக்கு மின்தடை ஏற்பட்டதன் காரணமாக, சில பெண்களிடம் ஏன் உதவிப் பேராசிரியைகளிடமும் கூட, சில ஆண்கள் தகாத விதத்தில் நடந்து கொண்டதாக, 'ஹிந்து' ஆங்கில நாளிதழ், ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இன்று செய்தித்தாள்களில் மாணவர்கள் தற்கொலையை அடுத்து அதிக இடம் பிடிக்கும் செய்தி, ஆசிரியர்கள் ஒரு சிலர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது பற்றித்தான். நம் கல்வி நல்ல நடத்தையை கற்றுக்கொடுப்பதில்லையோ என்று தோன்றுகிறது. நன்னடத்தையைக்கற்றுக்கொடுக்காத படிப் பு நாசத்தைத்தான் விளைவிக்கும் என்று அந்தக் காலத்திலேயே நம் பெரியவர்கள் கூறியிருக்கிறர்கள். அக்காலத்தில் சிறிய வகுப்புகளில் ஔவையின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற நல்ல பண்பைப் போதிக்கும் பாடங்கள் சொல்லிக்கொடுப்பர்கள்.
இன்று பகுத்தறிவு என் ற பெயரில் இத்தகைய நன்னெறியூட்டும் கதைகளையும் கட்டுரைகளையும். நீதிநூல் களையும் சொல்லித் தருவதில்லை என்று தோன்றுகிறது. போதாததற்கு சினிமாக்கள், தவறாக பயன படுத்தப்படும் கம்யூட்டர்கள் இவை நம் இளம் உள்ளங்களை வெகுவாகப் பாதித்து உள்ளன. அரசியல் தலையீடும் இதற்குக்கரணமாக இருப்பது மிகவும் வருந்தத் தக்கது.
No comments:
Post a Comment