ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஏதோ ஒரு வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான். நம் வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்திலும் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தே நம்முடைய பயணங்கள் உள்ளன. சிறு சிறு விஷயங்களில் ஆரம்பித்து, மிகப் பெரிய வெற்றிகள் வரை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நமக்கு தொடர்ந்து தோல்விகள் துரத்தினால் மனம் விரக்தி அடைந்து விடுகிறது. நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்று உடைந்து போய் விடுகிறோம். இத்தகைய சூழ்நிலையை மாற்றி நீங்கள் இனி வெற்றியை மட்டுமே காண ஞாயிற்றுக்கிழமைகளில் இது போல செய்யுங்கள். ரொம்பவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரம் செய்தால் உங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். அது என்ன? எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றி இனி தொடர்ந்து காண்போம். எந்த ஒரு பரிகாரமும் நம்பிக்கையோடு செய்யும் பொழுது இரட்டிப்பு பலன்களை பெற முடிகிறது. மனதில் இனி நமக்கு தோல்வி என்பதே கிடையாது, வெற்றி மட்டுமே உண்டாகும் என்கிற நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்ய துவங்குங்கள். ஞாயிற்றுக்கிழமையில் 6.00 மணி முதல் 7:30 மணி வரையிலான காலகட்டத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வேறு ஒரு நாட்களும், வேறு ஒரு நேரங்களும் இதற்கு சரியானதாக இருப்பதில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். வெற்றிக்கு முதல் காரணமாக இருப்பது விநாயகப் பெருமான். ஞாயிற்றுக்கிழமைகளில் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட தோல்விகள் என்பதே இருக்காது. தொடர் வெற்றிகள் குவிய விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கு தீபம் ஏற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி கொடுங்கள். இது உங்களுக்கு வர இருக்கும் தோல்விகளை தடுத்து நிறுத்தி வெற்றியை மென்மேலும் பெருக செய்யும் எளிய வழிபாடாக இருக்கும். பின்னர் இந்த பரிகாரத்தையும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணியிலிருந்து செய்ய துவங்குங்கள். இதற்கு ஒரு இலை தேவை! அது வெள்ளருக்கன் இலை ஆகும். எருக்கன் செடியில் நிறைய நிறங்கள் உண்டு. அதில் வெள்ளையாக இருக்கும் எருக்கன் செடியில் இருந்து பறிக்கப்பட்ட இலை ஒன்றை எடுத்து வந்து சுத்தம் செய்து உலர விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் சாம்பிராணி தூபம் போட பயன்படுத்தும் தூபக்கால் ஒன்றை எடுத்து வையுங்கள். நீங்கள் இந்த பரிகாரத்தை வீட்டிற்கு வெளியில் செய்ய வேண்டும். வீட்டிற்கு வெளியில் ஏதாவது கொஞ்சம் இடம் இருக்கும் அல்லவா? அங்கு அமர்ந்து செய்து கொள்ளலாம். வீட்டிற்குள் கட்டாயம் செய்ய வேண்டாம். எருக்கம் இலையில் உங்களுடைய பிரச்சனையை வேண்டுதலாக பேனாவால் எழுதிக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது சிறிதளவு வேப்ப எண்ணெயை தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெய் இல்லாதவர்கள் நல்லெண்ணெயுடன் வேப்பம்பொடியை சேர்த்து பயன்படுத்தலாம். சாஸ்திரத்திற்கு இரண்டு சொட்டு விட்டால் போதும், அதிகம் தேவையில்லை. அதன் பிறகு அதன் மீது ஒரு கற்பூர வில்லை ஒன்றை வையுங்கள். பின்னர் நெருப்பை பற்ற வைத்து கற்பூரத்தை எரிய செய்யுங்கள். கற்பூரம் முழுமையாக எரிந்து வேப்ப எண்ணெய்யுடன் சேர்ந்து இலை முழுவதுமாக எரியும் வரை அங்கே நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். அதன் பிறகு இதனை யாருடைய கால்களிலும் படாதவாறு போட்டுவிட்டு வந்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தோல்விகள் என்பது இனி உங்களுக்கு ஏற்படாது என்கிற தன்னம்பிக்கை வளரும். தொடர்ந்து வெற்றிகள் குவிய துவங்கும், நம்பிக்கையோடு செய்து பயனடையலாமே!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment