Tuesday, August 23, 2022

உளுந்து வடை...

 தமிழக மக்கள் அல்லாமல் ஒட்டு மொத்த தென்னக மக்களின் விருப்ப பலகாரம் இந்த உளுந்து வடை என்றால் மிகையாகாது.

நமது பாரம்பரிய உணவு பலகார வரிசிசையில் எப்போதும் no 1 இந்த உளுந்து வடைதான்.
நம்மில் பலருக்கு காலையில் ரெண்டு வடை ஒரு காபி or டீ
என குடித்தால்தான் அன்றைய பொழுதே விடிகிறது..
எனக்கு தெரிந்து தமிழகத்தின் சில இடங்களை தவிர்த்து ஏனைய மாநிலம் முழுதும் வடைதான் முக்கிய காலை ஸ்நாக்ஸ்.
அதுவும் , வட மாவட்டங்கள் தவிர்த்து தஞ்சை திருச்சி திண்டுக்கல் என ஆரம்பித்து, திருப்பூர்
கோவை மதுரை, விருதுநகர் என தென் கோடி வரை வடை இல்லாத டீ கடை பார்ப்பது அரிது.
அதுவும் மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் வடையின் தலைநகர் அல்லது தாய் வீடு என்றே கூறும் அளவிற்கு இன்றும் கோலோச்சி வருகின்றது.
சில காலம் முன்பு மதுரையில் ஒரு கடையில் வடை சாப்பிட்டோம். அதுதான் முழுமையான வடை என நினைக்கிறேன்.
உளுந்து மாவுடன், சிறு துண்டுகள் இஞ்சி, மிளகு, சிறு துண்டுகள் தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை என கலந்த பரிபூரண ருசி ..
மாலையில் சாராயக்கடை முன்பு கூடும் கூட்டம் போல காலையில் இந்த வடை தின்றுவிட்டு
டீ குடிக்க ஒரு கும்பல் ஒவ்வொரு கடை முன்பும் நிற்பார்கள்.
அந்தளவு நம் மக்கள் வாழ்வோடு இரண்டற கலந்து விட்ட ஒன்று இந்த வடை கலாசாரம்.
அதன் உடன் கொடுக்கும் சட்னி, மாவு கலந்த சாம்பார் ...😄😄😄 தனி ருசி.
இப்போது தொழிற்போட்டி காரணமாக தரமான சட்னி மற்றும் சாப்பாட்டிற்கு ஊற்றும் அளவிற்கு காய்கறி கலந்த தரமான சாம்பார் தருகிறார்கள்.
90% கடைகளில் சொந்தமாக வடை மற்றும் இதர பலகாரங்கள் தயாரித்து கொள்கிறார்கள். சில இடங்களில் தனியார் மொத்தமாக தயாரித்து அப்பகுதி கடைகளுக்கு விநியோகம் செய்கிறார்கள்.
என்றாவது இதன் மார்கெட் வேல்யூ பற்றி சிந்தித்து இருப்போமா என்றால் சந்தேகம் தான்.
தோராயமாக ஒரு நாளைக்கு 1 கோடி வடைகள் தயாரித்து விற்கபடலாம் என ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.
ஆனால் என் மதிப்பு படி இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
சராசரியாக ஒரு வடை , அளவு மற்றும் சேர்ப்பு பொருட்களை பொறுத்து ₹5 முதல் ₹10 வரை விற்கப்படுகிறது.
( அதுவே இங்கே பெங்களூரில் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்கும். ₹25 விலை )
நாம் சராசரியாக ₹7 என வைத்து கொண்டாலும், 7× 1 கோடி என்றால் ஒரு நாளையின் விற்பனை தொகை 7 கோடிகள். இதை தவிர இதர போண்டா பஜ்ஜி காரவடை போன்றவை எல்லாம் கலந்து சராசரியாக ₹3 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகலாம்.
ஆக ஒரு நாளைக்கு 10 கோடி ரூபாய்கள்.
மாதம் 300 கோடி ரூபாய்.
ஒரு வருட விற்பனை தொகை ஏறத்தாழ 3,600 கோடி ரூபாய் ஆக இதன் சந்தை மதிப்பு இருக்கிறது.
இந்தளவு இதை விற்க எவ்வளவு எண்ணெய், பருப்பு ( மாவு ) வகைகள்,
அடுப்பு, எரிபொருள், மனித வளம் தேவை என கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
ஆக நாம் எளிமையாக சாப்பிடும் ஒரு பொருளின் சந்தை மதிப்பு 3,600 to 4,000 கோடி என்பது வியப்பிற்குறிய ஒரு அம்சமாக என்னை கவர்ந்த ஒன்று..
😄😄😄
(( ஒரு சிறு குறிப்பு..
இதை பிஜேபி ஆட்கள் படிக்காமல் இருக்க வேண்டும். அவர்கள் படித்தால் அவர்கள் அமைச்சரிடம் சொல்லி இதற்கும் வரி போட்டு விடுவார்கள். ))
May be an image of food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...