Thursday, August 25, 2022

அமைச்சர்களின் பேச்சால் தி.மு.க.,வுக்கு தர்மசங்கடம்.

 தமிழக அமைச்சர்கள், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதால், தி.மு.க., தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமான அமைச்சர்கள் மீது, முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது.

அமைச்சர்கள்  பேச்சு,  தி.மு.க.,  தர்மசங்கடம்


தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், ஆட்சியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவு இல்லை; அமைச்சர்களின் செயல்பாடும் எதிர்பார்த்த அளவு இல்லை.இந்நிலையில், அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய முறையில் பேசி, கட்சிக்கும் ஆட்சிக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றனர்; இது, கட்சித் தலைமையை கவலை அடைய செய்துள்ளது.மூத்த அமைச்சரான நேரு, பல விஷயங்களை பகிரங்கமாக பேசி, சிக்கலை உருவாக்கி வருகிறார்.


சர்ச்சை



சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அங்கு வந்திருந்த டி.எஸ்.பி., பற்றி குறிப்பிட்டார். 'இவருக்கு இருக்கும் திறமை என்னவென்றால், என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர். 'ஒருவரை குற்றவாளியாகவும் ஆக்க முடியும்; குற்றவாளி பட்டியலில் இருந்து எடுக்கவும் தெரியும். இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. அவர் எங்களுடன் வளர்ந்தவர்' என்றார்.இது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'கழக அரசியல், காவல் துறையை சீரழித்த வரலாற்றை, சுருக்கமாக சொல்லி விட்டார்' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டித்துள்ளார்.

'ஸ்காட்லாந்துக்கு நிகரான காவல் துறை நிலை அந்தோ பரிதாபம்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல் செய்திருக்கிறார். அதேபோல், பேட்டியின்போது சென்னை மேயர் பிரியாவை, அமைச்சர் நேரு ஒருமையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு மேயர், 'அமைச்சர் என்னை ஒருமையில் பேசவில்லை. உரிமையில் பேசினார்' எனக் கூறி முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.மற்றொரு மூத்த அமைச்சர் வேலு, 'போக்குவரத்து வாகனங்கள் கூடியுள்ளன.



'சாலையை விரிவாக்கம் செய்யச் சென்றால், நிலம் இல்லாதவன் கூட, ஒரு பச்சை துண்டு போட்டுக் கொண்டு, என் நிலத்தை எடுக்காதே என்கிறான். 'சாலையை அகலப்படுத்தி தான் ஆக வேண்டும். அதற்கு இருபுறமும் நிலங்களை கையகப்படுத்த வேண்டும்' என பேசினார். இதுவும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.


நெருக்கடி



எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னை - சேலம் ஆறு வழிச்சாலை உட்பட பல சாலை விரிவாக்கப் பணிகளுக்கு, தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போதைய அமைச்சர் பேச்சு, தி.மு.க.,வுக்கு தர்மசங்கடத்தை
ஏற்படுத்தி உள்ளது. 'ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடா?' என, சமூக வலைதளங்களில், மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இவர்கள் வரிசையில், நிதி அமைச்சர் தியாகராஜன், பிரதமரின் கல்வித் தகுதியை குறிப்பிட்டு விமர்சித்ததும், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், நீதிபதிகளை விமர்சித்ததும் மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதுடன், முதல்வருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள முதல்வர், வரும் 30ம் தேதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில், அனைவருக்கும் கடிவாளம் போடத் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...