விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின், 60வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, அவரை வாழ்த்திப் பேசிய தி.மு.க., பேச்சாளரும், தமிழ்நாடு பாடநுால் கழக தலைவருமான லியோனி, ஹிந்து மத சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை கேவலமாக விமர்சித்து உள்ளார்.
ஹிந்துக்கள் சஷ்டியப்த பூர்த்தியின் போது, அரை டன் விறகை போட்டு கொளுத்தி, புகையை ஏற்படுத்துவதாகவும், 'சுக்லாம் பரதரம்...' என்ற அர்த்தம் புரியாத சுலோகங்களை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். லியோனி அவர்களே... அந்த பாடலின் அர்த்தம் உங்களுக்கு புரியாவிட்டாலும், உண்மையில் அது வாழ்த்துவது தான்.
ஆனால், உங்களை போல அடுத்தவர் மனதையும், மதத்தையும் புண்படுத்துவது கிடையாது. முன்னர் நீங்கள் நாலாந்தர பேச்சாளர்... முச்சந்தியில் நின்று என்ன வேண்டுமானாலும் பேசினீர்கள். யாரையோ மகிழ்விப்பதற்காக, பணம் வாங்கிக் கொண்டு, பலமுறை ஹிந்து மதம் பற்றி கேலியும், கிண்டலும் செய்தீர்கள். இப்போது அப்படியல்ல... பாடநுால் கழக தலைவர் என்ற கவுரவமான பொறுப்பில் உள்ளீர்கள்; அரசிடமிருந்து சம்பளம் பெறுகிறீர்கள். அப்படி இருக்கையில், ஒரு கட்சித் தலைவர் பிறந்த நாள் விழாவிற்கு போனதே தவறு. அங்கு சென்றதோடு மட்டுமல்லாமல், ஒரு பாரம்பரியமிக்க மதத்தை பற்றி இழிவாக பேசியது மிகப்பெரிய தவறு.
தமிழக அரசே... 'ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள ஈ.வெ.ரா., சிலையை அகற்ற வேண்டும்' என்று கூறிய, கனல் கண்ணனை கைது செய்தது போல, ஹிந்து மத சடங்குகளை விமர்சித்த லியோனியையும் கைது செய்ய வேண்டும். அவரை பாடநுால் கழக தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
No comments:
Post a Comment