Tuesday, August 23, 2022

வைராக்யம்" சரியா தப்பா?

 பங்களூர் ஸ்டேஷனில் வாரணாசி போகும் ரயிலுக்காக

காத்திருந்தார்கள் பல்லவியும்,மகள்
சைதன்யாவும்,
வேகமாக ஹாரன் அடித்துக
கொண்டு ஸ்டேஷனில் நுழைந்தது
டிரையின், வண்டி நின்றவுடன்
தன்னுடைய கோச்சை கண்டு பிடித்து;
ஏறினாள் பல்லவி, , சைதன்யா தண்ணீர் பாட்டிலும்,புக்கும் வாங்கி;வந்து கொடுத்தாள் அம்மாவுக்கு, வண்டி கிளம்பப்
போகிறது, சைதன்யா வண்டியில்
இருந்து இறங்கி விட்டாள்,
கை காட்டி விட்டு அவள் கிளம்பி;
விட்டாள், கதவோரமாக நின்று அவள்
போவதையே பார்த்துக் கொண்டு
இருந்தாள் பல்லவி, வண்டி கிளம்பி
விட்டது, அப்பொழுது ஒரு நடுவயது
காரர் கையில் பெட்டியுடன் ஏறினார்
வண்டி கிளம்பி விட்டதால் தடுமாறி
விழப்போனார், ,அவர் கையைப் பிடித்து
உள்ளே இழுத்தாள் பல்லவி,,அவர்
சமாளித்து கொண்டவுடன் தன்
ஸீட்டில் அமர்ந்து விட்டாள் பல்லவி;
வந்த மனிதர் எதிர் ஸீட்டில்
அமர்ந்தார், பல்லவி புக் எடுத்து படிக்க ஆரம்பித்தாள், வேறு யாரும்
இன்னும் ஏறவில்லை, அவர்கள்
இருவர் மட்டும் தான்,
கொஞ்ச நேரம் அமைதியாக
இருந்தது, பிறகு யாரோ "பல்லவி"
என்று கூப்பிடும் சப்தம் கேட்டது,
நிமிர்ந்தாள் பல்லவி, யாரை இந்த
ஜன்மத்தில் பார்கக்கூடாது என்று
வைராக்யமாக விட்டு போனாளோ
அந்த கணவர் தான் 20 வருடம்
கழிந்து அவள் முன்னே அமர்ந்து
இருக்கிறார்,
அந்த மனிதர் திரும்ப "பல்லவி
என்றார், " 20 வருடம் ஆகியும் இன்னும்
என்னை மன்னிக்கவில்லையா?"
இருவர் ,கண்களும் சந்தித்துக
கொண்டன, கண்ணீர் ஆறாக பெருக
ஆரம்பித்தது,,
அவருக்கென்ன தெரியும்? இந்த
இருபது வருடங்கள் அவரை நினைத்து பட்டவேதனை? இன்னும வீட்டை விட்டு ,போன அந்த நாள்
நன்றாக நினைவு இருக்கிறது,
அன்று ,சைதன்யாவின் பிறந்த நாள், முதல் பிறந்த நாள், இரண்டு
வருடம் குழந்தையில்லாமல் பிறகு
தான் ,பிறந்தாள் ,சைதன்யா, சைதன்யா இரவு தந்தை மடியில்
தான் தூங்குவாள், தாய் தூங்க
வைத்தால் தூங்காமல் தந்தை வரும்
வரை காத்திருப்பாள், செல்லமாக
வளர்த்தார்கள் இருவரும்,
பிறந்த நாளுக்காக எல்லோரையும் பார்ட்டிக்காக இரவு
கூப்பிட்டு இருந்தார்கள், வீடு பூரா
பலூனும்,வண்ண விளக்குமாக
ஜொலித்தது, எல்லோரும் வந்து
விட்டார்கள், விசாகன் அவள் கணவரை
காணவில்லை, ஆபிஸில் இருந்து
சீக்கிரம் வந்துவேன் என்று சொன்ன
கணவர் 9 மணியாகியும் வரவில்லை
வந்த விருந்தினருக்கெல்லாம்
டின்னர் கொடுத்து அனுப்பி விட்டாள்
கேக் வெட்டவில்லை, குழந்தையும்
உறங்கி விட்டாள், பதினோரு மணிக்கு கணவர் போதையில் வருகிறார், தட்டு தடுமாறி வரும்
அவரை கண்டவுடன் பல்லவி ஒன்றும் சொல்லாமல் கூட்டிண்டு போய் படுக்க வைத்தாள்"
வீடு பூரா சிதறி கிடக்கும் பூக்கள்
பலூன்கள் ,வெட்டப்படாத கேக், எல்லாம் முடிந்து விட்டது, குடிப்பது
பல்லவிக்கு பிடிக்காது, குடிகார
தந்தையால் அவள் பட்ட வேதனை
சாக்கடையில் கிடக்கும் தந்தையை
எத்தனை நாள் தூக்கிண்டு வந்து
தண்ணீர் விட்டு குளிப்பாட்டி
இருக்கிறாள்" லுங்கி விலகியது கூட
தெரியாமல் ரோடில் கிடக்கும்
தந்தையை எல்லோரும் கேலி செய்யும் பொழுது பொறுக்காமல்
அவரை தூக்கி வீட்டுக்கு கூட்டிண்டு
வந்து இருக்காள், சமைத்து வைத்து
விட்டு காலையில் வேலைக்கு போகும்
தாயால் என்ன செய்ய முடியும்?
அப்படியும் பல்லவி படித்தாள், படிக்க
விடாமல் எத்தனையோ இரவுகள்
தந்தை தாயை உதைத்து அடிப்பதை
பார்த்து கலங்கி இருக்கிறாள்,
வயது வந்தவுடன் வேறு ஒரு
தொல்லை, தாய்க்கும்,மகளுக்கும்
குடிபோதையில் வித்தியாசம் தெரியாத தந்தை,,
பிறகு பல்லவி அடுத்த வீட்டு பாட்டி
வீட்டில் தான் தூக்கம், கல்யாணம்
ஆகும் வரை தான் பட்ட கஷ்டத்தை
பல்லவியால் இன்றும் மறக்க
முடியவில்லை, கல்யாணத்திற்கு முன்பே தன் கணவன் குடிக்கக்
கூடாது என்று சத்தியம் வாங்கி
இருந்தாள், என்று குடிக்க ஆரம்பித்தானோ அன்றே தான்
அவனை விட்டு போய் விடுவேன்"
என்று சொல்லி இருந்தாள்
இவ்வளவு சொல்லியும் அவர்
குழந்தை பிறந்தநாள் அன்றே குடித்து
விட்டு வந்ததை பார்த்து அவளுக்குள்ளே ஒரு பிரளயம் உண்டாகி விட்டது, தானும்,தன் பெண்ணும் இனி அவனுக்கு வேண்டாம் என்று தானே குடித்து விட்டு வந்தான், இனி அவன் கூட
வாழ்வதில் அர்த்தம் இல்லை, தான்
பட்ட வேதனை,பயம்,அவமானங்கள்
தன் பெண் படக்கூடாது,,
மறுநாளே தன்னுடையதும்,
குழந்தையுடைய சாமான்களை எடுத்து கொண்டு விடுதி ஒன்று
நடத்தும் தன் தோழியிடம் போய் விட்டாள் பல்லவி,, இனி கணவன்
கூட சேரந்து வாழ்வதில்லை என்று
மனதில் ஒரு வைராக்யம்.
சொல்வது சுலபம், ஒரு ,பெண்
குழந்தையுடன் தனியாக இருக்கும்
பொழுது சந்திக்கும் அவமானங்களும்,
வேதனையும் தனிதான், அந்த தோழியின் விடுதியிலேயே வெலை
பார்த்துக் கொண்டு பெண்ணை
வளர்த்தாள், பெண பள்ளியில் கூட
படிக்கும் பெண்கள் " உன் தந்தை
ஓடி போய் விட்டாரா? என்று கேட்கும்
பொழுது அழுது கொண்டே ஓடி
வரும் சைதன்யாவை பார்த்து தான்
தப்பு செயது விட்டோமோ?
என்று தோன்றும், அவசரப்பட்டு
இந்த தனிமை வாழ்க்கை ஏற்று
கொண்டோம், அதே சமயம் தன்
வைராக்யத்தால் தன் பெண் தந்தை
அன்பு இன்றி கஷ்டப்படுகிறாள்,
எல்லா பெண்களுக்கும் கிடைக்க
வேண்டிய பெற்றோர் இருவருடைய
அன்பும் தன் வைராக்யத்தால் தன்
பெண்ணுக்கு கிடைக்கவில்லை,
பெண் தந்தையை நினைத்து அழும் பொழுது தான் தன்
வைராக்யத்தால் தங்கள் மூவருடைய வாழ்க்கையும் பாழாக்கி
விட்டோம்,,கணவரை பற்றி ஒரு
விவரமும் இல்லை,
இன்று இருவரும் பல வருடங்களுக்கு பிறகு இன்று சந்திக்கிறார்கள், கணவர் தான்
அவளையும்,குழந்தையும் தேடி அலைந்தததையும், பிறகு வேலையை
விட்டு விட்டு காசிக்கு போக
தீர்மானாத்ததையும் கூறினார்,
அவர்களுடைய சொந்த வீட்டில்
பல்லவியும்,குழந்தையும் இல்லாமல்
இருக்க முடியாததால் வீட்டை பூட்டி
விட்டு வேறு ஊருக்கு போய் விட்டார்
கணவர், தான் அன்று ஆபீஸ் பார்ட்டியில் கூல்டிரிங்கில் மது கலந்து கொடுத்ததை அறியாமல்
குடித்து விட்டதாகவும் சொல்லி.
மன்னிப்ப கேட்டார்,
இனி தான் பல்லவிக்கு இஷ்டம்
இருந்தால் கூடவே இருக்க இஷ்ட
படுவதாகவும் கூறினார்,
பல்லவி தான் அவசரப்பட்டு
வைராக்யத்தால் எடுத்த முடிவால்
எத்தனை பேருடைய வாழக்கை
சீரழிந்து இருக்கு" என்று நினைத்து
வருத்தப்பட்டாள்
தான் இனி ஒரு நாளும் கணவரை பிரியப் போவதில்லை
என்று கூறினாள், காசிக்கு இருவரும்
போய் விட்டு திரும்பும் ,பொழுது
தங்கள் ,சொந்த வீட்டிற்கு சைதன்யாவுடன் போகணும என்று
விருப்பத்தை தந்தை தெரிவித்தார்
இத்தனை நாள் இழந்த அன்பை தன்
மகளுக்கு கொடுக்கணும் என்று ஆசை;பட்டார்,
பிரிந்த குடும்பம் காசியில் இருந்து
திரும்பியவுடன் ஒன்று சேர்ந்தது,
"வைராக்கியம் வாழ்க்கையில்
தேவையா?
எப்பொழுது தன் வைராக்யத்தால்
மற்றவர் வாழ்க்கை பாதை மாறுகிறதோ அப்பொழுதே அந்த
வைராக்யத்தை விட்டு விட வேண்டும்,
சில வைராக்யத்தால் வாழ்க்கையில்
முன்னேறுகிறார்கள், அது அவர்கள்.
தனிப்பட்ட பிரச்னை, மற்றவரை நம்.வைராக்யம் பாதிக்காதவரை சரி
இல்லாவிட்டால் அந்த ,வைராக்யத்தை
விட்டு விட வேண்டும்,
May be an illustration of one or more people and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...