விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாடநுால் கழகத் தலைவர் லியோனி, ஹிந்து மதத்தை இழிவு
படுத்தி பேசியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 'ஹிந்து மதத்தில், சஷ்டியப்த பூர்த்தி என்ற மணி விழா நிகழ்ச்சியின் போது, தம்பதியை மணிக்கணக்கில் அமர வைத்து ஹோமம் நடத்துவர்.'அப்போது, புரியாத மந்திரங்களை சொல்லி, அவர்களை இம்சை செய்வர். ௬௦ ஆண்டுகளாக பட்ட துன்பம் போதாதென்று, இந்த தொல்லை வேறா என்று, கணவருடன் மனைவி சண்டை போடுவார்' என, குதர்க்கமாகப் பேசி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார், ஆபாச பேச்சாளர் என பெயர் பெற்ற லியோனி. இவர் எத்தனை கோவில்களுக்கு சென்று, இது போன்ற சண்டைகளை நேரில் பார்த்தாரோ தெரியவில்லை!
இவரை போன்றவர்களின் குதர்க்கமான பேச்சை கேட்கும் போது, 'வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களை இழிவுபடுத்த வேண்டும்; சிறுபான்மையினரை புகழ்ந்து தள்ள வேண்டும்' என, தி.மு.க., பேச்சாளர்களுக்கு கட்சி மேலிடம், 'அசைன்மென்ட்' கொடுத்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
காரணம், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய பலர் மீது, ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஈ.வெ.ரா., துவக்கி வைத்த ஹிந்து மத துவேஷம் என்ற இழிவான கலாசாரம், தமிழகத்தில், 100 ஆண்டுகளாக தொடர்வது வெட்கக்கேடானது.
லியோனி அவர்களே... ஹிந்துக்கள் ஹோமம் வளர்ப்பதையும், அய்யர் மந்திரம் சொல்வதையும் கிண்டலடிக்கும் நீங்கள், ஈ.வெ.ரா., வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும், உங்கள் கட்சித் தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், திருச்செந்துார் கோவிலில், சமீபத்தில் மிகப்பெரிய யாகம் நடத்தினாரே; அதுபற்றி கிண்டலடிக்கும், விமர்சிக்கும் தைரியம் உண்டா?
திராவிட இயக்க வரலாற்றில் மறைக்கப்பட்ட சில உண்மைகளை, உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்... அதாவது, 1940-க்கு முன், கிறிஸ்துவர்களையும், இஸ்லாமியர்களையும் கடுமையாக விமர்சித்து, 'விடுதலை' பத்திரிகையிலும், 'புரட்சி' என்ற இதழிலும், ஈ.வெ.ரா., எழுதிய
கருத்துக்கள், சிறுபான்மையினரை கொதிப்படையச் செய்தன. அவர்கள் கொடுத்த பதிலடியால் ஆடிப் போன ஈ.வெ.ரா., பிற மதத்தினரை விமர்சிக்கும் தன் அணுகுமுறைக்கு, அதோடு மூட்டை கட்டி விட்டார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள், கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், ஹிந்து மத சடங்குகளை, பண்டிகைகளை இன்று வரை விமர்சித்து வரும் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும், இதுவரை சிறுபான்மையினரை விமர்சிக்கும் திராணி இல்லாமல் போனதன் சிதம்பர ரகசியம் இது தான்.
ஹிந்து மதத்தினர் பொறுமையானவர்கள்; அதனால் தான், நீங்கள் எல்லாம் இப்படி வாய் கிழிய பேசுகிறீர்கள். அவர்கள் வெகுண்டு எழும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும் போது, வீரமணிகள், லியோனிகள் எல்லாம், நாடு விட்டு நாடு ஓட வேண்டிய நிலைமை உருவாகும்... ஜாக்கிரதை!
No comments:
Post a Comment