கர்நாடக மாநிலம் விஜயபுராவில், மெஹ்பூப் முசாலி என்ற முஸ்லிம், பூஜா என்ற ஆதரவற்ற ஹிந்து பெண்ணை, 10 ஆண்டுகளாக வளர்த்து, ஹிந்து முறைப்படி சங்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணத்தில், இரு மதத்தினரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்
* பீஹார் மாநிலம் நாளந்தா மாவட்டம், மடி என்ற கிராமத்தில், மசூதியை ஹிந்துக்களே பராமரித்து, தினமும் ஐந்து வேளை தொழுகை நடத்த வழிவகுத்துள்ளனர்*கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், இரிஞ்சாலா குடாவில், ஹிந்துக்களின் சுடுகாட்டு பராமரிப்பாளராக, 28 வயதான சபீனா ரஹ்மான் என்ற முஸ்லிம் பெண் பணியாற்றி வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான, 250க்கும் மேற்பட்டோரின்
உடல்களை தகனம் செய்துள்ளார்.
* கேரள மாநிலத்தில், அயப்புனா நுாஜூம் என்ற, 22 வயது மாணவி, கேரள பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்
* இதே மாநிலத்தில், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்னா சலீம் என்ற முஸ்லிம் ஓவியர், கிருஷ்ணர் மேலுள்ள பக்தியால், அவரது உருவத்தை பல வடிவங்களில் வரைந்து, ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமி நாளில், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார்*பீஹாரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்ற இஸ்லாமியரின் கடையில், 25 ஆண்டுகளாக பணிபுரிந்து உயிரிழந்த, ஹிந்து பெரியவர் ராமதேவ் என்பவரின் இறுதிச் சடங்கை, முஸ்லிம் குடும்பத்தினர் ஹிந்து முறைப்படி நடத்தியுள்ளனர்.
இப்படி நம் நாட்டின் பல பகுதிகளில், ஹிந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே பரஸ்பரம் நல்லிணக்கமும், சகோதரத்துவமும் நிலவி வருவது பாராட்டிற்குரியது; பெருமை தரும் விஷயமுமாகும். வாழு அல்லது வாழ விடு என்ற தத்துவத்தின் அடிப்படையில், வேற்றுமையில் ஒற்றுமையை காண்கிறோம். இது மேலும் வலுப்பெற்று, நாடு வளம் பெற பாடுபடுவோம் என, ௭௫வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள நாம் உறுதி ஏற்போம். சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவோம்.
No comments:
Post a Comment