எத்தனை பெரிய சிந்தனை இருந்தாலும் அதனால் எத்தனை உயரம் (பொருளாதாரத்தில்) சென்றாலும் கடைசியில் மனதில் இருக்கும் அர்த்தமில்லாத தாழ்வு மனப்பான்மை வெறுப்பாக வெளி வந்தே தீரும்.
அது தமிழ்நாட்டில் சாதீய வெறுப்பாக வெளி வந்தே தீரும்.
உடையை கிண்டல் செய்தீர்கள்.
உணவு பழக்கத்தை கிண்டல் செய்தீர்கள்.
சொல்லாடலை கிண்டல் செய்தீர்கள்
இறை நம்பிக்கையை கிண்டல் செய்தீர்கள்.
ஊரில் நடக்கும் அத்தனை இழிவுக்கும் அவர்கள் மீது பழி போட்டீர்கள்.
அந்த கூட்டத்தின் வீடு புகுந்து சமையல் அறை வரை சென்றவர்கள் தோசையை ஆராய்ந்து விட்டு இப்போது குளியல் அறையிலும் நுழைக்கிறீர்கள்.
எப்பேற்பட்ட புத்திசாலித்தனம் ?
நீயெல்லாம் சமூக நீதி பேசும் நியாயமார்??
ஆனால் இத்தனை செய்தும் நீங்கள் அவர்களை ஜெயித்ததாக உணர்ந்திருக்கிறீர்களா? இல்லை என்றால் ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? முடியாது.
காரணம் அந்த கூட்டம் உண்மையில் போட்டியிலேயே இல்லையே ! அந்த கூட்டம் உன்னுடன் போட்டியே போடுவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்வின் நலன் என்கிற ஒற்றை இலக்கை நோக்கி சத்தியத்தின் வழியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
ஊரில் நடக்கும் உங்கள் தோல்விகக்கெல்லாம் அவர்கள் மீது குற்றம் சுமத்தி சாடி சந்தோஷப் படும் வரை நீங்கள் உங்கள் வெற்றியை அடையாளம் காணவே முடியாது.
அடுத்தவனை இகழ்ந்து வீழ்த்தி செல்வது வெற்றியாகாது.
உன் பலம் என்ன?
உன் அறிவு என்ன?
அதை எப்படி செம்மை படுவது.?
எங்கிருந்து யாரிடம் இன்னமும் கற்கலாம்?
என்று ஆக்க பூர்வமாக யோசிக்காமல் என்னை பற்றி மற்றவன் என்ன நினைக்கிறான்? அவன் என்னை மதிக்க நான் எப்படி பேச வேண்டும்? போன்று குருட்டு யோசனைகளை நம்பும் வரையில் வெற்றியின் வாய்ப்பு உங்கள் கண்ணுக்கே தெரியாது.
கடைசி வரை கடந்து போகும் கார்களை துரத்தி சென்று குரைக்கும் பைரவார்களாகவே நின்று போக வேண்டியதுதான். பரிதாபத்திற்குறியவர்கள்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
26/08/2022
No comments:
Post a Comment