Saturday, September 3, 2022

ஆலோசனை வேண்டும் என்று கேட்டால்கூட அது ஒரு மிதமான ஆலோசனையாகத்தான் இருக்க வேண்டும்.

 ஒருவர் நம்மிடம் அவரின் ஏதோ ஒரு பிரச்சினையை சொல்லும்போது, எப்பொழுதும் ஓர் ஆலோசனையையோ, அறிவுரையையோ, தீர்வுக்கான வழிமுறையையோ அள்ளி வீசாமல் இருப்பது நல்லது. முக்கால்வாசி நேரங்களில் மனிதர்களுக்கு தேவையாக இருப்பது அவர்கள் புலம்புவதை தற்காலிகமாக கேட்பதற்கான காதுகள் மட்டுமே !

அவரவர் சூழல் அவரவருக்கே சரியாக தெரியும். மேலும் நமக்கு அவர்கள் சூழல் தெரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே போல் சிந்தித்து ஒரே போல் முடிவெடுத்து காரியம் செய்பவர்களும் அல்ல ......
ஆலோசனை வேண்டும் என்று கேட்டால்கூட அது ஒரு மிதமான ஆலோசனையாகத்தான் இருக்க வேண்டும். எடுத்தேன் கவுத்தேன் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஆலோசனைகளை அறவே தவிர்ப்பது நன்று.....அப்படி ஒரு முடிவெடுக்கும் ஆற்றல்கொண்ட மனிதர்கள் தானே அப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்....நம்மிடம் வந்து கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
நமக்கு சரியானதாகத் தோன்றும் முடிவுகள், அவர்களால் செயல்படுத்த இயலாததாக இருக்கலாம்.....மனித மனங்களின் உணர்வுகள் வித்தியாசமானவை, அறிவு வேலை செய்யும் விதம் வித்தியாசமானவை ......சூழல்கள் வித்தியாசமானவை......
காதை மட்டும் கொடுத்தால் போதும்.....ஆனால் அதையும் அளவோடு செய்வோம்......இல்லையெனில் நாமும் ஒரு நாள் புலம்பும் நிலைக்கு தள்ளப்படுவோம்! 🤣

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...