Thursday, September 1, 2022

'வேத கோளரங்கம் கோயில்'

🚩🚩🚩🙏🙏🙏🚩🚩🚩
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாக மாற இருக்கிறது நம் (இந்து) மதத்தின் கோயில் ஒன்று..
மேற்கு வங்கத்தின் மாயாபூரில் கட்டப்பட்டு வரும் இந்து மதத்தின் 'வேத கோளரங்கம் கோயில்' உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிருஷ்ண விழிப்புணர்வு அமைப்பான இஸ்கான் (ISKCON) இந்த கோவிலை எழுப்பி வருகிறது. இந்த கோவில் கட்டுமானப்பணிகளில் முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு தற்போது கோயில் தளம் முடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டால், ஒரே நேரத்தில் சுமார் 10,000 பேர் ஒன்றாக நின்று தரிசனம் செய்யலாம்.
இதில் சுவாரசியம் என்னவெனில், இந்த கோயிலை எழுப்பும் திட்டத்தின் தலைவராக இருப்பவர் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான 'ஃபோர்ட்' நிறுவனத்தின் முக்கிய தலைவர்களுல் ஒருவரும் அந்நிறுவனத்தின் வாரிசுகளில் ஒருவருமான ஆல்ஃபிரட் ஃபோர்டுதான்.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து மேற்குவங்கத்தின் மாயாபூர் வரையிலான ஆல்ஃபிரட் ஃபோர்டு-இன் பயணம் 1975லிருந்து தொடங்கிவிட்டது. இஸ்கான் உறுப்பினராகவும், நிறுவனர் ஸ்ரீல பிரபுபாதாவின் சீடராகவும் இருப்பவர்தான் ஆல்ஃபிரட் ஃபோர்டு. இதன் தொடர்ச்சியாக தனது பெயரை 'அம்பரீஷ் தாஸ்' என்றும் மாற்றினார்.
மேலும், மாயாபூரை இஸ்கானின் உலகளாவிய தலைமையகமாக மாற்றும் பிரபுபாதாவின் திட்டத்தில் ஆல்ஃபிரட் ஃபோர்டு முழுமையாக முதலீடு செய்யத்தொடங்கினார்.
தொடக்கத்தில் உள்கட்டமைப்பிற்காக சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான நிதியை அளித்துள்ளார். இந்த கோயிலுக்கான திட்டம் சுமார் ஒன்பது ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. வெறுமென நிதியளித்ததுடன் நின்றுவிடாமல் உலகம் முழுவதும் சுற்றி மேலதிக நிதியையும் திரட்டினார்.
அப்படி என்ன இந்த கோயிலில் சிறப்பம்சம் என்று கேட்கிறீர்களா? இதில், வேத கலை, அறிவியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவது மட்டுமல்லாது இந்த கோயில், இந்துக்களின் புனித நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள கிரக அமைப்பின்படி வடிவமைக்கப்பட இருக்கிறது. அதாவது பூமி கிரகம் போன்று கீழ்த்தளம் அமைக்கப்படும். கடவுள் மேலே இருப்பார். எனவே எஸ்கலேட்டர்களில் பயணித்து சென்று தரிசிக்க வேண்டும்.
700 ஏக்கர் பரப்பளவில் இஸ்கான் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கருவறை மட்டும் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும். இதை முழுமையாக கட்டி முடிக்க சுமார் ரூ.400 கோடி செலவாகும். 2024ல் கட்டி முடிக்கப்படும்.
நவீன அறிவியலுக்கும் இந்திய அறிவு அமைப்புக்கும் இடையேயான உரையாடலை ஊக்குவிக்கும் வகையில், இந்த கோயிலில் உயர்கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆன்மீக நிறுவனங்களும் கட்டமைக்கும் என்று சொல்லப்படுகிறது.
கோவில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, கம்போடியாவில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோவிலை விட இஸ்கான் கோவில் பெரிதாக உருவெடுக்கும். இது உலகின் மிகப்பெரிய கோவில் என்ற பெருமையை பறைசாற்றும் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பு;நம் இந்து மதத்தில் உள்ள அப்பாவி மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, நம் நாட்டு சில முட்டாள் கிருஸ்தவர்கள்,அவர்களின் கிருஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்ச்சிக்கும் நிலையில்,உலக கோடீஸ்வரர்களான பல கிருஸ்தவர்கள்,அவர்களாகவே இந்துமதத்தில் தங்களை இணைத்துக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
🚩🚩🚩🙏🙏🙏🚩🚩🚩


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...