பெற்றோருக்கான பதிவு... !!!
*காலையில எட்டு டூ பத்து..*
*மதியானம் நாலு டூ ஆறு...*
*நீங்களே அடிக்கிற ... அளவுக்கு மலிந்து கிடக்கிறது இந்தக் காலத்து பள்ளிக் கூடத்து பிஞ்சுகளின் காதல்..*
*பெருமைக்குரிய_ பெற்றோர்களே ... !!!*
*ஒரு நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள்.*
*தலைமுறை இடைவெளியில் உங்கள் காலத்து நடைமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு, உங்கள் குழந்தைகளை அணுக வேண்டாம்..*
*காரணம் மிக அவசரகதியான உலகத்தில் உங்கள் பிள்ளைகள் பிணைக்கப்பட்டு இருக்கிறார்கள்..*
*உங்கள் பொறுமை புத்திசாலித்தனத்தை விட அவர்கள்* *அதிவேகமும் விவேகமும் ஆனவர்கள்...*
*நவீன யுகத்தின் வீபரீதங்களின் மொத்த தாக்குதல்களுக்கும்... உங்கள் பிள்ளைகள் ஆளாகி விட்டிருக்கிறார்கள்..*
*நீங்கள் பதிநாலாம் வயதில், ஊருக்கு ஒதுக்குப்புற தியேட்டரில், அரைகுறையாக பார்த்த பாலியல் படங்களை,*
*உங்கள் மகனோ மகளோ*
*உங்கள் வீட்டுக்குள்* *அதைவிட துல்லியமாகவும் தெளிவாகவும் வைத்து பார்க்கும் காலம் இது..*
*அந்தவகையான வெப்சைட்டுகளுக்கு அவர்கள் தேடிப்போவதில்லை....*
*இன்னபிற தளங்களுக்கு செல்கையில் போர்ன்சைட் விளம்பரங்களை அள்ளித்தெளிக்கிறது இணைய உலகம்...*
*அதை ஸ்கிப் செய்துவிட்டு போன பிள்ளைகளைவிட* *அதைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆவலில் அதற்குள் மூழ்கிப்போன பிஞ்சுகளே அதிகம்...*
*நீங்கள் கள்ளிச்செடிகளில் பெயர் எழுதிய அதே பள்ளிப் பருவத்தில்,* *இவர்கள் கள்ளிச் செடிகளுக்குள் காமம் எழுதுகிறார்கள்..*
*ஒரு பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனுக்கும் மாணவிக்கும் குறைந்த பட்சம் ஐந்து காதல் நிறுத்தங்களாவது அல்லது மூன்று காதல் முறிவுகளாவது இருக்கின்றன..*
*நீங்கள் கூட்டிச் செல்லாத , ஆள் ஆரவராமில்லா உள்ளூர் சுற்றுலாத் தளங்கள்* *அத்தனையும் உங்கள் பிள்ளைகளுக்கு தெரிந்திருக்கின்றன.*
*இதுவரை, நீங்கள் கூட அறிந்திராத ஹோட்டல்கள் அவர்களுக்கு அத்துப்படி...*
*ஆண்குழந்தைகள் தவிர்த்து பெண் குழந்தைகளும் தற்போது மதுவின் வாசனை பழகி இருக்கிறார்கள்..*
*என் பிள்ளையிடமோ என்னிடமோத்தான் ஆன்ராய்டு போன் இல்லையே என நிம்மதி கொள்ளாதீர்கள்..*
*தோழன் தோழி என்ற வைரஸ்களால் உங்கள் பிள்ளைகளுக்கு பாதிப்பு அதிகம்.*
*என் கண் முன்னே ஒரு எஸ்.டி.டி பூத்தில் ஒரு எட்டாம் வகுப்பு மாணவி ஐந்து வேறுவேறு நபர்களுக்கு போன் செய்கிறது.. கடைசியாக அப்பாவுக்கு போன்செய்து, இன்னைக்கு ஸ்பெசல்கிளாஸ் வீட்டுக்குவர லேட்டாகும் டாடி என்கிறது....*
*முன் பொம்மைகளால் நிரம்பிக் கிடந்த குழந்தைகள் உலகம், இப்போது பொய்மைகளால் நிரம்பிக்கிடக்கிறது...*
*உங்கள் குழந்தைகளின் நண்பர்களை அவ்வப்போது அழைத்துப் பேசி அவர்களின் குணத்தை தெரிந்துகொள்ள முனையுங்கள்.*
*குறிப்பாக உங்கள் குழந்தைகளுடன் நட்புறவில் இருங்கள்.*
*முடிந்தால் நல்ல தோழனாகவும் தோழியாகவும் இருங்கள்...*
*காலையில் தவிர்க்க முடியாத வேலை நிமித்தமாக இருந்தாலும், மாலை வேலையில் கண்டிப்பாக உங்கள் மகனையோ, மகளையோ பள்ளிக்கூடம் சென்று அழைத்து வாருங்கள்...*
*மாதம் ஒருமுறையாவது (அது அரசுபள்ளியாகட்டும், தனியார் பள்ளியாகட்டும்)உங்கள் குழந்தைகளின் வகுப்பாசிரியரை நேரில் சந்தித்து பேசுங்கள்....*
*உங்கள் குழந்தைகளின் நடத்தை மாற்றம் பற்றி கருத்துக்களை கேட்டறியுங்கள்..* *ஏனெனில் உங்களை விட , அவர்களிடம்தான் குழந்தைகள் அதிக நேரத்தை கழிக்கிறார்கள்...*
*இன்னொரு பக்கம் சைக்கோத்தனமான காதல், போதை ஆசாமிகளின் ஹீரோயிச பாதிப்பு,
*இதெல்லாம் மேலை நாடுகளில் சகஜம் என்போர் வழக்கம் போல எந்த கவலையும் இல்லாமல் உங்கள் பணிகளில் மூழ்கிப்போகலாம்..*
*குடும்பமானம் ,பிள்ளைகளின் வருங்காலம் , கனவு, லட்சியம்..*
*எக்ஸட்ரா எக்ஸட்ரா வேணும்னு நினைக்கிறவங்க*
*பிள்ளைங்க மேல லேசா ஒரு கண்ணு வைங்க..*
*ஆம்பள பசங்க பொம்பள பசங்கன்ற வேறுபாடெல்லாம் வேண்டாம்..*
*முக்காவாசி அய்யோக்கியதனம் மொள்ளமாறி வேலை பாக்குறதுக பூராம் இந்த ஆம்பள பொம்பள பசங்கதான் இருக்குதுங்க நான் பார்த்த வரைக்கும்...*
*டிக்கெட்டுல , ரூபாய் நோட்டுல நம்பர் எழுதி போடுறது....*
*ப்ரெண்டோட அண்ணன் அவனோட ப்ரெண்ட்டுன்னு தொடர்கதையா நீளுகிறது இந்த பட்டியல்..*
*பசங்களும் மலரில் தேனெடுக்கும் வண்டுகளை போல, வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திட்டு காரியம் முடிஞ்சதும் கழட்டி உட்டுட்டு போயிட்டே இருக்கானுங்க..*
*அடுத்த இரண்டொரு நாளில் அழுது முடித்து,*
*அடுத்த காதலுக்கு.. தன்னை புதியதாக தயார் படுத்திட்டு கெளம்பி விடுகிறார்கள் நவீன பட்டாம்பூச்சிகள்..*
*ரோஜாச்செடிகள், வேலிக்குள் இருக்கும்* *மட்டும்தான்* *பாதுகாப்பாகவும் அழகாகவும் இருக்க முடியும்...*
*வேலிதாண்டினால்...,*
*அதைப் பிடிங்கி நுகர்ந்து பாத்து கசக்கி எறியும் கரங்களும்,* *முழுச்செடியையும் மேய்ந்து திங்கும் ஆடுகளும் தெருவுக்கு நூறு இருக்கின்றன..*
*எனவே*
*உங்கள் வீட்டு மகள்களை ரோஜாக்களாக கசங்காமல் பாதுகாத்திடுங்கள்*...
*மகன்களை சிங்கமென மிருகமாக வளர்க்காமல் நல்லமனிதனாக வளர்தெடுங்கள்*... !!!
*உண்மை கசக்கும்*.....
No comments:
Post a Comment