எதிர்கட்சி தலைவர்களை குறிவைத்து மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவிவிடுகிறது என்று கூறி பட்டியல் ஒன்றினை குறிப்பிட்டார்.
அதில் ஒன்று பீகாரில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வீடுகளிலும் சோதனை நடத்தி அச்சுறுத்தியது என்பது.
எதனால் தேஜஸ்வி யாதவ் குடும்பத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது?
என்பதை பார்ப்போம்.
2004-2009 ம் ஆண்டில் அமைந்த திமுக இடம்பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவின் தந்தை.
2008 - 09 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் பலரிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, பீகாரின் பாட்னா உட்பட பல பகுதிகளில் அவர்களுக்கு சொந்தமான இடங்களை தனது குடும்பத்தாரின் பெயரில் எழுதி வாங்கி கொண்டுள்ளார். அப்படி பதிவு நடைபெற்ற மூன்று நாட்களில் அந்த குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு நேரடியாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ரயில்வே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரயில்வே வேலைகள் பொது அறிவிப்பின் மூலமாக தேர்வு நடத்தி நிரப்பப்படும். ஆனால் லாலு நடைமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, தனிப்பட்ட முறையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பணி ஆணை வழங்கியுள்ளார்.
இது பற்றிய வழக்கின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தியதில் ஏழுக்கும் மேற்பட்ட முறைகேடுகள் ஆதாரபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்கள் லாலுவின் மனைவி, மகள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பல்வேறு காலகட்டங்களில் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிலும் பெரும்பாலான நிலங்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் வாங்கி, சிறிது காலத்திற்கு பிறகு அந்த நிறுவன பங்குகளை லாலுவின் மனைவி அதிகளவில் வாங்கி, அந்த நிறுவனத்தின் டைரக்டராகவும் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தான் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் இப்போது வரை பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு மேலும் ஆதாரங்களை திரட்டி வழக்கினை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைகளின் போது இருநூறுக்கும் மேற்பட்ட இட பத்திர பரிவர்த்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டது. 1,05,292 சதுர அடி நிலம் முறைகேடாக லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு பரிவார்த்தனை செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், இதில் அமலாக்கத்துறையும் நுழைந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாகவே தேஜஸ்வி யாதவிற்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது எங்கே இருக்கிறது?
No comments:
Post a Comment