"எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறையை பாஜக தவறாக பயன்படுத்துகிறது. கைது நடவடிக்கைகளின் மூலம் பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு சீட்டு கூட வாங்க முடியாது. அரசியல் பழிவாங்கலால் பாஜக நமது ஜனநாயகத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்துகிறது."
மத்திய அரசுக்கு எதிராக இப்படி கண்டனம் தெரிவிச்சது யாருன்னா?
"ஊழலை ஒழிக்கப்போறேன்னு" கட்சி ஆரம்பிச்சவரு தான்.
ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜரிவால், டெல்லி முதலமைச்சரே தான்.
இவரு தான் கொஞ்ச நாளைக்கு முன்னால
" கெஜ்ரிவால் ஊழல்வாதி என்றால், இந்த உலகத்தில் யாருமே நேர்மையானவர்கள் இல்லை." என்று சவால்விட்டார்.
ஆனால் சோகம் என்னன்னா,
இவரு முதலமைச்சராக இருக்கற டெல்லி மாநில அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும்,
கெஜ்ரிவாலின் நிழலாக தொடர்ந்த டெல்லி மாநில துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவும் ஏற்கனவே ஊழல் வழக்கில் சிறையில் இருக்காங்க.
அதிலும் மணீஸ் சிசோடியா தொடர்புடைய புதிய மதுபான கொள்கை(ளை) ஊழல் வழக்கில் இந்தியாவின் பல மாநில அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என்பதால் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட சோதனைகள் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் இன்னும் பல பெரிய அரசியல் புள்ளிகள் கைதாக இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கமான அரசியல்வாதியாக மட்டுமே இருந்திருந்தால், செந்தில் பாலாஜிக்கு ஆதரவாகவும், மத்திய அரசிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருப்பதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றிருக்கலாம்.
ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு முன்னாள் குடிமைப்பணியியல் அதிகாரி ஆவார். அதிலும் அவர் ஒரு ஐஆர்எஸ் அதிகாரி.
செந்தில் பாலாஜி மீதான வழக்கின் கடுமை, உண்மைத்தன்மை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் ஆணை என அனைத்து விஷயங்களையும் நன்றாக புரிந்தவர்.
செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக மத்திய அரசின் அழுத்தம் இந்த விஷயத்தில் எள்ளளவும் கிடையாது என்பது அவருக்கு மிகவும் நன்றாக தெரியும்.
அப்படி இருந்தும் அரவிந்த் கெஜ்ரிவால் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிக்க முக்கிய காரணம்,
'டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தமிழ்நாடு வரைக்கும் நீள்வதும், அதில் இங்கு அதிகாரமட்டத்தில் உள்ள சிலருக்கு பங்கிருக்கிறது' என்பதால் தான்.
ஆம் ஆத்மி = டெல்லி திமுக.
எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் தான்.
அரவிந்த் கெஜ்ரிவால் யோக்கியர் தான், ஆனால் அவர் வரும் போது சொம்பை எடுத்து உள்ளே வெச்சுடனும்.
No comments:
Post a Comment