Saturday, June 17, 2023

கூடுதல் தொகையை நம்மிடம் வற்புறுத்திக் கேட்பது சரியல்ல.

 ரேபிடோ, ஓலா போன்றவற்றில் அடிக்கடி பயணிப்பவர்கள் என்றால் ஒவ்வொரு தடவையும் “கூட 30 ரூபாய் சேர்த்து தாங்க” என்று கேட்பார்கள். அவர்களிடம் முடியாது என்று பேசினால் நமது நேரம்தான் வேஸ்ட். சரி என்று வரச் சொல்லி விட்டு முடியும் போது, Gpay மூலம்தான் தர முடியும் என்று சொல்லுங்கள். தந்து விட்டு மொபைல் செயலி மூலம் பில் தொகையை விட கூடுதலாக வாங்கி விட்டார் என்று புகார் தந்து அந்தத் தொகையை உங்கள் ரேபிடோ, ஓலா wallet-ல் வரவு வைத்துக் கொள்ளலாம். ரேபிடோ, ஓலாவில் எவ்வளவு தொகை தருவார்கள் என்பதையெல்லாம் ஒத்துக் கொண்டுதானே அவர்கள் அதில் இணைகிறார்கள். அதன் பிறகும் கூடுதல் தொகையை நம்மிடம் வற்புறுத்திக் கேட்பது சரியல்ல.

இன்று அவசரப் பயணத்திற்காக ரேபிடோவில் பதிவு செய்தேன். சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆட்டோக் கட்டணம் ரூ. 106 என்று காட்டியது. அதிலேயே ரூ. 20 தள்ளுபடி கூப்பனும் இருந்தது. அதையும் தேர்ந்தெடுத்தேன். உடனே அழைத்த ஓட்டுநர் “30 ரூபாய் கொடுத்தால்தான் வருவேன்” வலியுறுத்தினார். ‘ரொம்ப அதிகம்” என்றேன். “அப்போ 20 ரூபாய் கொடுங்க” என்று பதிலுக்குக் காத்திராமல் கட் செய்தார். சற்று நேரத்தில் வந்தார்.
செல்ல வேண்டிய இடத்திற்கு அருகில் வந்தவுடன், “அவ்வளவு தூரம் போனால் நான் திரும்ப ஒன்றரை கிலோ மீட்டர் சுத்தித்தான் வரணும். அதனாலே இங்கேயே இறங்கிக்குங்க” என்றார். அதாவது கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டும் நான். அதையும் பொறுத்துக் கொண்டேன். அந்த நேரம் பார்த்து ரேபிடோ செயலி என் மொபைலில் வேலை செய்யவில்லை. அவர் “பில் தொகை ரூ. 109 வந்திருக்கு. 30 ரூபாய் சேர்த்து தாங்க” என்றார்.
“நான் செல்ல வேண்டிய இடத்துக்கே ரூ. 106தான் காட்டியது. அதில் 20 ரூபாய் தள்ளுபடியும் இருந்தது. அரை கிலோ மீட்டர் முன்னாடியே நிறுத்திட்டீங்க. அப்புறம் எப்படி கூட வரும்?” என்று கேட்டேன். “நான் என்ன பொய்யா சொல்றேன்?” என்றார். அவரிடம் விவாதம் செய்ய நேரமில்லை. 130 ரூபாயை மாற்றி விட்டு அப்படியே நடந்து கொண்டே ரேபிடோ செயலியை மீண்டும் பார்த்தேன். பில் தொகை ரூ. 81 என்று காட்டியது. உடனே அதிலேயே புகார் கொடுத்தேன். அவர்கள் விசாரித்து ரூ. 49 கொடுத்து விட்டனர்.
சென்ற இடத்தில் வேலை முடிந்து திரும்ப அதே ரேபிடோவில் பதிவு செய்தேன். ஒரு வயதான பெரியவர் ஆட்டோ ஓட்டி வந்தார். கூடுதலாகத் தொகை கேட்கவில்லை. வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன் செயலியில் பார்த்தேன். ரூ. 76 என்றிருந்தது. அவருக்கு ரூ. 30 கையில் கொடுத்து விட்டு வந்தேன்.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...