நண்பர்கள் உட்கார்ந்து சீட்டு
விளையாடுவது போன்றதல்ல
அரசு நிர்வாகம். ஒரு அமைச்சரின்
உண்மையான காரணம் ஆளுநருக்கு
அனுப்பப்படும் பரிந்துரையில் இருக்க
வேண்டும். இப்பரிந்துரை என்பது ஒரு
சட்டபூர்வமான ஆவணம் (legal document)
அமலாக்கத்துறையால் money laundering
வழக்கில் கைது செய்யப்பட்டு,
judicial custodyல் இருக்கிறார் என்பதன்
காரணமாகவே இலாகா மாற்றம்
பரிந்துரைக்கப் படுகிறது என்ற
உண்மை முதல்வரின் அந்தப்
பரிந்துரையில் இருக்க வேண்டும்.
அந்த உண்மை இல்லாமல் வெறுமனே
உடல்நலக் குறைவு என்று குறிப்பிடுவது
அ) suppression of material facts என்ற குற்றம்;
ஆ) முழு உண்மையையும் சொல்லாமல்
உண்மைகளைத் திரித்துக் கூறும்
குற்றம் (distortion of facts).
ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான
கடிதப் போக்குவரத்து, தகவல் பரிமாற்றம்
உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவின்
அரசமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப்
பட்டவை. அதை முதல்வர் கடைப்பிடிக்க
வேண்டும். ஆளுநர்-முதல்வர் உறவு என்பது
அதன் ஒவ்வொரு அம்சத்திலும்
சட்டபூர்வமானது.
Civil service drafting என்றால் என்ன என்று
தெரிந்து கொள்ள வேண்டும்.
IAS பாடத்திட்டத்தில் இது மிகவும்
முக்கியமான ஒன்று. நிர்வாக இயலில்
நான் சொன்னதெல்லாம் பால பாடம்.
அரசு நிர்வாகத்தில் விளையாட்டுக்கு
இடமில்லை. முதல்வர் செய்தது தவறு
மட்டுமல்ல அத்தவறு தற்குறித்தனத்தின்
விளைவும் ஆகும்.
இந்தக் கடிதத்தை முதல்வர் draft செய்யவில்லை
என்பதை நாம் அறிவோம். Drafting in English
அவரால் இயலாது. ஒரு IAS அதிகாரிதான்
draft செய்திருக்க வேண்டும். Suppression of
material facts கூடாது என்று அந்த IAS அதிகாரி
சொல்லி இருக்க வேண்டும். அவர் சொல்லியும்
முதல்வர் கேட்காமல் போனாரா என்னவோ?
No comments:
Post a Comment