இந்த மாதிரி அதிரடியான கவர்னரை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை.
இந்த அதிரடியை எதிர்பாராததால், ஆடி போய் இருக்கின்றன அந்த கூடாரம்.
எதிர்கட்சிகள் ஆளாளுக்கு மாண்புமிகு கவர்னரை, வாய்க்கு வந்தபடி, வசைபாடி கொண்டு, தங்களுடைய ராஜ விசுவாசத்தை ஆளுங்கட்சிக்கு காண்பித்து கொண்டு இருக்கின்றன.
அரசாங்கமே ஸ்தம்பித்து விட்டது மாதிரி சபாநாயகர் முதற்கொண்டு எல்லா அமைச்சர்களும், ஆளாளுக்கு போட்டி போட்டு கொண்டு, கிடைக்கிற கேப்பில் வாய்க்கு வந்தபடி பேசி, இந்த விஷயத்தை திசை திருப்ப, கடுமையாக
போராடி கொண்டு இருக்கிறார்கள்.
அதிலும் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் ஒரு படிமேலே சென்று, பத்திரிக்கையாளர் சந்திப்பில், கவர்னரை 'அவன் இவன்' என்று பேசி இருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல், பத்திரிக்கையாளர்கள் மீதும் பாய்ந்து இருக்கிறார்.
இந்த நிகழ்வுகள் எல்லாமே மீடியாவில் திரும்ப திரும்ப வந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அவர் அவதூறு வழக்கை சந்திக்க வேண்டி வரலாம். இந்த விஷயத்தில் தோழர்களுக்கு கஷ்டகாலம் தான்.
இதற்கு நடுவில் அமலாக்கத்துறை 8 நாட்கள் விசாரணை நடத்தலாம் என்று சில நிபந்தனைகளுடன், உயர்நீதி மன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்மூலம் சட்டம் தன் கடைமையை செய்ய வேண்டும் என்பதில் உயர்நீதி மன்றம் உறுதியாக வலுயுறுத்தி இருக்கிறது.
அடுத்ததாக இந்த கேசில் செ. பா. தம்பி அசோக் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சார்பாக நோட்டிஸ் அனுப்பபட்டு இருக்கிறது. அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இந்த சூழ்நிலையில் செ.பா. இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர, தமிழக அரசு தனி அரசாணை போட இருப்பதாகவும் தகவல்.
அப்படி நடந்தால் மீண்டும் அது விஷயமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம். ஆக நாட்டிலேயே மிகவும் பிஸியாக இருப்பது நம் உயர்நீதி மன்றங்கள் தான். அரசியல் வழக்குகள் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்து கொண்டு இருக்கின்றன.
நேற்று நாள் முழுவதும் ஊடகங்களில் செ. பா. பார்த்து சலித்தவர்களுக்கு இன்று 10 நிமிஷத்திற்கு ஒரு முறை பிரேக்கிங் நியூஸ் வந்து படுத்துகிறது.
பாவம் ஊடக பத்திரிக்கையாளர்கள்! மூன்று நாட்களாக விடிய விடிய வேலை செய்து ஓய்ந்து போய் விட்டார்கள். ஊடக பார்வையாளர்கள் அதை விட பாவப்பட்டவர்களாக ஆகி விட்டார்கள்.
செ. பா. உடல்நிலை சரியில்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம் என்பதில் மாற்று கருத்து இல்லை. நல்லபடியாக நலம் பெற்று வரவேண்டும் என்பது தான் அனைவரது விருப்பமும்.
இதை படிப்பவர்கள் மனதில் கை வைத்து சொல்லுங்கள்.
செ.பா. விஷயத்தில் அரசு இயந்திரம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம், ஆரவாரம் தேவையா?
செ. பா. இலாக்காக்கள் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டது.
இனியாவது செ. பா.யை அமைச்சர் பதவியில் இருந்து விடுவித்து விட்டு, அரசு மக்கள் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் திமுகவினர் உட்பட அனைத்து பாமர மக்களின் விருப்பம்.

No comments:
Post a Comment