Friday, November 3, 2023

லோக் ஆயுக்தா எந்த அடிப்படையில் இவ்வளவு முக்யத்துவம் பெற்ற புகாரைத் தள்ளுபடி செய்ய முடியும்...!?

 விடாத கண்டமாக தொடரும் ‘பொங்கல் பரிசு’.. திமுக அமைச்சர்கள் மீதான வழக்கில் ஐகோர்ட் போட்ட அதிரடி ஆர்டர்.

சென்னை: அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோர் மீதான புகாரை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,296 கோடியே 88 லட்சம் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் வெல்லம், புளி ஆகியவை தரமற்ற பொருட்களாக விநியோகம் செய்ய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூவரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை நிராகரித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் லோக் ஆயுக்தா உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற வகையில் இருந்தன. உயிரிழந்த பூச்சிகள் அதில் காணப்பட்டது. தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக
முதல்வருக்கு புகார் அளித்தேன்.
அந்த புகாரின் அடிப்படையில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகாரை விசாரிக்க லோக் அயூதாவுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
May be an image of ‎2 people and ‎text that says '‎கலிழ்காத மழக் தரهதحர 03-11 2023 WG சற்று முன் அமைச்சர்கள் மீது புகார்; விசாரணைக்கு உத்தரவு பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்த லோக் ஆயுக்தா உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான புகாரை மீண்டும் விசாரிக்கவும் லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவு.‎'‎‎
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...