திருவாரூர் பாஜக மாவட்ட செயலாளராக இருந்தவர் கருப்பு முருகானந்தம். பின் சென்னை துறைமுக தலைவரானார். தற்போது பிஜேபி யின் மாநில பொதுச்செயலாளர்.
திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளர் இரா.காமராஜ். மன்னார்குடி தொகுதியில் கள்ளர் vs அகமுடையார் பிரச்சினை இருப்பதால் பறையர்கள் மிகுந்த நன்னிலம் தொகுதியில் (நன்னிலம் ஒன்றியத்தில் மட்டும் தற்போது இருபது ஊராட்சி மன்ற தலைவர்கள் பறையர் சமுகத்தை சேர்ந்தவர்கள்) அதிமுக சார்பில் வெற்றி பெற்று உணவுத்துறை அமைச்சரானார்.
திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் T.R.B. ராஜா தற்போது தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர்.
இவர்கள் அத்தனை பேரும் முக்குலத்தோர் சமுகத்தை சேர்ந்தவர்கள்.
அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதில், நிலவுடைமையை தக்க வைத்துக் கொள்வதில், குளம் குட்டை ஏலம் துவங்கி கட்டிட ஒப்பந்தம், கட்டப்பஞ்சாயத்து என தொழில் ரீதியான போட்டிகளில் வேறொரு சமுகத்தை சேர்ந்தவர்கள் உள் நுழையாத படி கவனமாக பார்த்துக் கொள்வதில் இவர்களுக்குள் கூட்டணி அமைத்து ஒரு ஒற்றுமையும் புரிதலும் உண்டு. இவர்களுக்குள் தனிப்பட்ட முறையில் கொள்கை கோட்பாடு எல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
இத்தனைக்கும் இந்த சமுகம் இந்த மாவட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒரு குறைந்த பட்ச மக்கள் கொண்ட சமுகம்.
இங்கே இரண்டாவது இடத்தில் இருக்கும் வெள்ளாளர் (பிள்ளை) சமுகம் இவர்கள் போடும் இரண்டாம் கட்ட உள்ளாட்சி பொறுப்புகளை பெற்று கொண்டு திருப்தியாக இருக்கிறது.
இந்த மாவட்டத்தின் பெரும்பான்மை சமுகம் 42% கொண்ட பறையர் சமுகம் இவர்கள் போடும் எலும்பு துண்டை கவ்விக்கொண்டு கையாலாகாத சமூகமாக இயங்கி வருகிறது.
இதே நிலைதான் மற்ற மாவட்டங்களிலும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலக பொதுவெளியில் இதே வன்கொடுமையை மரம் வெட்டி குச்சி கொளுத்தி... சமூகத்தைத் தவிர வேறொரு சமூகத்தினருக்கு செய்துவிட முடியுமா??
மலையாள படமான கம்மட்டிபாடம் திரைப்படத்தில் தலித் சமுகத்தை சேர்ந்த பாலன் சேட்டன் தன் சகா ஒருவன் வேறொருவனால் தாக்கப்பட்ட போது அடித்து துவைத்து விட்டு சொல்லுவார்.
கம்மட்டிபாடம் பிள்ளையர் மேல் கையை வச்சா என்னா ஆகும்னு காட்டனும்.. அப்பத்தான் பயப்படுவானுங்கனு...
ஆனால் இங்கு எத்தனை பெரிய கூட்டம் கொள்கை குந்தானி என்று ஒரு பைசாவிற்கும் பயன்படாமல் திசைமாற்றப்பட்டு கிடக்கிறது.
No comments:
Post a Comment