யாரையும் திசை மாற்ற வேண்டாம். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்துக் கூறாதீர்கள்.
எதிரிகள் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு ஒதுங்காதே. உன் செயல்கள் மூலம் எதிரிகளை இல்லாது செய்துவிடு.
எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் உண்மையும், செயலில் நேர்மையும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை.
நேர்மையாக இருப்பவன்,
பணத்தை விட
பகையை வேகமாக
சம்பாதிக்கிறான்..
நல்ல விஷயத்திற்காக
தனியாக நிற்க வேண்டி வந்தாலும்,
தைரியமாக நில்…!!
இன்றைய காலத்தில்
பொய் பேசியதால் உருவான
பகைகள் குறைவு..!
உண்மை பேசியதால்,
உருவான எதிரிகள் அதிகம்.
அற்பமான விஷயங்களை விவாதிப்பதால் தான் நேரம் அதிகமாக செலவழிகிறது. காரணம் நமக்கு அற்பமான விஷயங்களைப் பற்றித்தான் நிறையத் தெரியும்.ஆகவே சத்தான விஷயங்களை நினைத்தும் பேசியும் செயல்படுவோம்.அற்பமான விஷயங்களை பற்றி பேசுவதை தவிற்போம்.
சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.எதற்காக பேசுகிறோம்,எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ,பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே கூடுமானவரை அமைதியாகவே இருங்கள்:
பள்ளிக்கூடம் நடத்துபவனால்
அடுத்த வருடம்
இன்னொரு பள்ளிக்கூடத்தை
ஆரம்பிக்க முடிகிறது ...
பேருந்து வைத்திருப்பவனால்
அடுத்த வருடம்
இன்னொரு பேருந்து
வாங்க முடிகிறது
மருத்துவனை
நடத்துபவனால் அடுத்த வருடம்
புதிதாய் ஒரு மருத்துவமனை
திறக்கப்படுகிறது
தொழிற்சாலை நடத்துபவனால்
அடுத்த வருடம்
இன்னொரு தொழிற்சாலை
தொடங்க முடிகிறது
விவசாயம் செய்பவன் மட்டும்
அடுத்த வருடம்
தனது நிலங்களை விற்கும்
நிலைக்கு தள்ளப்படுகிறான்...
சோறு போடுபவனை விட
விளைநிலங்களை
கூறுபோடுபவன் வளமாய்
வாழும் தேசத்தில்!
பிறப்பிற்கு முன்,
கருவறையில் முதல் ஆட்டம்..!!
1 முதல் 5 வரை,
தொட்டிலில் துயிலாட்டம்..!!
5 முதல் 18 வரை,
வயது அறியா வம்பாட்டம்..!!
18 முதல் 21 வரை,
பருவம் பூத்த காதலாட்டம்..!!
21 முதல் 25 வரை,
காதல் வந்த பின்னே போதையாட்டம்..!!
25 முதல் 60 வரை,
பேருக்காக ஒரு ஆட்டம்..!!
காசுக்காக பல ஆட்டம்..!!
End,
போகும் போது எட்டு காலில்
ஊரு போடும் ஆட்டம் இறுதியாட்டம்..!!
#ஆசை_படாதே என்று சொல்ல ?? ஆசைபடாதே .........
ஆசை தானே ஆசை படக்கூடாது என்று தெளிவை தரும்,
எனவே ஆசைபடு
ஏதும் உன் ஆசை ஆகிவிட்டால் !!
உன் தனித்த ஆசை என்ற ஒன்றின் மீது உள்ள பற்று விலகி, பற்று அற்று போக ஆசையே சிறந்த வழிகாட்டி,
ஆசை பட கூடாது என்று தெளிந்த ஞானத்தை தரும் ஆசையை, ஆசை படு ..
மனநோய்க்கு காரணம்,
மனது அல்ல..!!
சில மனிதர்கள் தான்..!!
புத்தனென்று எவருமில்லை
புவியிலொன்றும் சுத்தமில்லை ...
சத்தமின்றி சாவதற்கு
சரவெடிகள் தேவையில்லை...
கற்பனையில் காண்பவரை
கருத்தினிலே தேடாதே.....
கர்ணனென யாருமில்லை
காண்பதெல்லாம் உண்மையில்லை....
பட்டாலும் திருந்தமாட்டாய்
பாசத்தை நிறுத்தமாட்டாய் .....
அறிவற்ற அணங்கே
அனுபவி ஆயுள்வரை.....
திரும்பாத இடத்திற்கு
திடீரெனத் தொலைந்திடவேண்டும்
விரும்பாத உறவுகளிங்கே
விதியெண்ணிக் கலக்கிடவேண்டும்
சூழ்நிலைக்கு ஏற்றவாறும்,
சுற்றி இருப்போருக்கு ஏற்றபடியும்,
தன் தேவைக்கு தகுந்தபடி,
தன்னை மாற்றி வாழ்பவர்கள் தான்,
நல்லவராக தெரிகின்றனர்..
No comments:
Post a Comment