சினிமா ஆசையில் என் மாமாவுடன் சென்னை வந்தேன். ஆனால் வந்த இடத்தில் மாமா வடையையும் சுண்டலையும் கொடுத்து விற்று வர சொல்லி விட்டார்.
ஆள் எடுப்பதாக கூறினார்கள். என் போன்ற பையன்கள் வேண்டும் என்று கேள்விப்பட்டேன்."பட்டாளத்திற்கா" என்றேன். பாசமலருக்கு என்றார்கள் அதுதான் எனது முதல் படம்.
டேக்கின் போது என்னவோ என் வாயில் ஹய்யோ...ஹய்யோ என்று வந்து விட்டது. மற்றவர்களுக்கோ ஒரே சிரிப்பு, எனக்கோ ஒரே திகில், ஆனால் அப்படியே இருக்கட்டும் என்று பீம்சிங் கூறிவிட்டார்.
பாசமலர் தயாராகி கொண்டிருக்கும் போது எடுத்தவரை சிவாஜி பார்த்திருக்கிறார். அதில் ஹய்யோ... ஹய்யோ அவருக்கு மிகவும் பிடித்து விட்டது.செட்டில் தங்கவேலு தான் சிவாஜியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
பொங்கல், தீபாவளிக்கு மட்டுமல்ல "துட்டுக்கு தட்டுபாடு வரும் போதலெல்லாம் அன்னை இல்லம் நோக்கி ஓடுவேன். கமலாம்மா என்னைக் கண்டால் பலகாரங்கள் கொடுப்பார்கள். சிவாஜியும், கமலாம்மாவும் என்னை காதர் என்று அழைப்பார்கள்.பிள்ளைகள் எல்லோருக்கும் ஹய்யோ...ஹய்யோ தான் ராஜாமணி அம்மையார் என்னை கரீம் பாய் என்றுதான் கூப்பிடுவார்.
என் தாயாக, தந்தையாக இருக்கும் அப்படிப்பட்ட சிவாஜி கணேசருக்கு கணேசனாக நடிப்பதை நினைத்து உண்மையிலே பூரித்து போகிறேன்.திருவிளையாடல் படத்தில் சிவனாக நடிக்கும் சிவாஜி கணேசனாருக்கு மகன் கணேசனாக நான் தானே நடிக்கிறேன்
நடிகர் "பக்கோடா காதர் ஒரு பத்திரிக்கை பேட்டியிலிருந்து...
No comments:
Post a Comment