நேற்று பஸ்ஸில் தொங்கிக்கொண்டு சென்ற மாணவர்களை கண்டித்து இறக்கி விட்ட பிரமுகர்,..
ரஞ்சனா நாச்சியார்....
இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர்களில் ஒருவர்....
நிஜ மறவர் குல ...மக்களுக்காக வீரம் கொண்டு செயல்படும் சத்திரிய பெண்மணி!!!
அதாவது நிஜ அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்...இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார்...
திராவிட தீது ஊடகங்கள் அவரை ஏதோ துணை நடிகை என்பது போல தலைப்பிட்டு கேவலப்படுத்துவது போல எழுதுகிறார்கள் ..
வெறும் 300 பேர் வாழும் ஒரு வேங்கை வயல் கிராமத்தில் மக்கள் குடிக்கும் தொட்டியில் மலத்தை கலந்தவர்களை கூட கண்டுபிடிக்க முடியாமல் இன்று வரை கிட்டத்தட்ட 250 லிருந்து 300 நாட்கள் ஆகின்ற நிலையில்....
குழந்தைகள் ஒழுங்கீனமாக சாலையை நடப்பதை தட்டிக் கேட்க கூட முடியாமல் இருக்கும் இந்த நாட்டில் இப்படி ஒரு வீரமான பெண் இருக்கிறாளே அதுவும் பாஜக கட்சியை சேர்ந்தவர் ஒரே நாளில் பெரிய அளவில் மக்களால் பாராட்டப்படுகிறாரே என்பதால் உடனடி கைது..
மக்களுக்கு உதவிக்கரமாக இருக்க காவல்துறையா அல்லது.....
ஆட்சியாளர்களின் ஏவல் துறையா...
வருத்தமாக இருக்கிறது...
வயதில் மூத்தவர்கள் பிள்ளைகள் தவறு செய்தால் தட்டி கேட்க வேண்டும். தன் கண் எதிரே எந்த குழந்தைகள் தவறான முறையில் நடந்து கொண்டாலும் அவர்களை நல்வழிப்படுத்த முன் வர வேண்டும்.
இந்த திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அப்படி நல்லது செய்ய முன் வருபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து சிறையில் அடைத்து அவமானப் படுத்தபடுகிறார்கள்.
மாணவர்களை மதுவுக்கு அடிமையாக்கும் இந்த திமுகவின் திராவிட மாடல் ஆட்சி மக்களால் நிராகரிக்கப்படும் வரை இந்த மாதிரி அவலங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்...
No comments:
Post a Comment