அவர்கள் குழந்தைகளாக இருந்த சமயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு இணையாக அல்லது அதை விட அதிகமாக கொண்டாடி சிலரை அன்பு செலுத்தியிருப்போம்.
ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு எது பிடிக்கும்? எது சரி? அவர்கள் எப்படி வர வேண்டும் என்று ஆதிக்கம் இல்லாத அக்கறை செலுத்துவோம்.
நம் முன்னாலேயே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு நம்மை அழைத்து நலமா? என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் கடந்து போகும் போது...
பெத்தவங்களுக்கே மரியாதை இல்லாத போது...அத்தையாவது..சித்தப்பனாவது...
மாமனாவது....
இதில் குற்றம் யார் மீது?
நிச்சயமாக அன்பு வைத்தவர் மீது அல்ல.
நற்பண்புகளை சொல்லி..உறவுகளின் அருமை சொல்லி வளர்க்காத பெற்றோர்களே ...காரணம்.
அருகி வரும் பந்தங்கள்.
No comments:
Post a Comment