Wednesday, January 1, 2020

திருந்துங்கள் இல்லை திருத்த படுவீர்கள்

ஒரு திமுக அன்பரின் வீட்டுக்கு அவரின் அழைப்பின் பேரில் செல்ல நேர்ந்தது அங்கு அவர் வீட்டில் பாலிமர் நியூஸ் ஓடி கொண்டிருந்தது வியப்பாக இருந்தது நண்பரை பார்த்து கேட்டேன் என்னய்யா சன் நியூஸ் இல்லை கலைஞர் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கும் என்று பார்த்தால் பாலிமர் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு என்று அதற்கு நண்பர் சொன்ன விளக்கம் நம்ம டிவியில் என்னிக்குபா நடுநிலையா நியூஸ் போட்டிருக்கான் அவனுக்கு சாதகமான நியூஸ் மட்டும் தான் போடுவான் அது மட்டும் இல்ல சன் நியூஸ், கலைஞர் நியூஸ் தொடர்ந்து பார்த்து கொண்டிருந்தால் நம்ம நாட்டை பற்றி ஒரு நெகடிவ் ஒப்பீனியன் தான் உருவாகுது அது நம்மள அறியாம நம்ம மனசை பாதித்து தேவை இல்லாத பயத்தை, கோவத்தை ஏற்படுத்துகிறது அதனால் தான் அந்த நியூஸ் சேனல் எல்லாம் வீட்டுக்குள்ள வரவேண்டாம் என்று முடிவெடுத்துளோம் என்றார்.
எனக்கு என்னவோ அவர் சொன்னது ஏதோ ஒரு திமுக கடைநிலை தொண்டரின் மனநிலைமை என்று தோன்றவில்லை அவர் என்னை பொறுத்தவரை பொதுவான 80 சதவீத மக்களின் பிரதிநிதியாக தோன்றுகிறார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...