Monday, January 6, 2020

ஸ்மார்ட் போன் பயன்பாட்டை மேலும் ஈஸியாக்க சில யோசனைகள் ....

1. உங்க போன்ல ஸ்கிராட்ச் அதிகமா இருக்கா.... ஒன்னும் பிரச்னையில்லை... கொஞ்சம் டூத் பேஸ்ட் எடுத்து டிஸ்பிளே மேல அப்ளை பண்ணிட்டு ஒரு துணியால தொடைச்சிட்டு பாருங்க.... பளிச்சிடும் உங்கள் மொபைல்.... வாவ்...
2. உங்க மொபைல் பேட்டரி சார்ஜ் கொறைஞ்சிட்டா சார்ஜ் மிச்சம் வைக்கிறதுக்காக மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணாதீங்க. அதுக்கு பதில் மொபைலை ஏரோபிளேன் மோட்ல போட்டு வைங்க. ஏன்னா சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு திரும்ப ஆன் பண்றதுக்குள்ள 4% சார்ஜ் காலியாகிடும்.
3. மொபைல்ல பாட்டு கேக்கும் போது சவுண்ட் குறைவா இருக்குதா... கவலை வேண்டாம்... மொபைல்ல ப்ளே பண்ணிட்டு அதன் ஸ்பீக்கர் கீழ் நோக்கி இருக்கிற மாதிரி ஒரு பேப்பர் கப் அல்லது ஜக் எதுக்குள்ளையாவது வச்சிடுங்க... இப்போ பாருங்க சவுண்ட் எப்படி கேக்குதுன்னு...
4. நம்ம மொபைல் சார்ஜர் வயர், ஹெட் செட் வயர்.. இதெல்லாம் சீக்கிரமா டேமேஜ் ஆகிடுதா.. இதனை தடுக்க ஒரு எளிய வழி... பால் பாயிண்ட் ரீஃபில்ல வரும் ஸ்ப்ரிங்கை எடுத்து இந்த வயர்கள் இரண்டு பக்கமும் சுத்தி வெச்சிடுங்க... எப்போதும் டேமேஜ் ஆகவே ஆகாது.
5. ரொம்ப பிரைட்டான அல்லது லைவ் வால் பேப்பர்களை செலக்ட் செய்து வைக்காதீங்க. இது பேட்டரி அதிகம் காலி பண்றதோட டிஸ்ப்ளே தெளிவாகவும் தெரியாது. சாலிட் கலர் அல்லது ப்ளாக் கலர் வால் பேப்பர் செலக்ட் பண்ணி வச்சுக்கோங்க. பேட்டரியும் ரொம்ப நேரம் வரும்.
6. உங்க மொபைல் சீக்கிரம் சார்ஜ் பண்றதுக்காக நீங்க அதை ஆஃப் பண்ணி வைக்க வேண்டியதில்லை. ஏரோபிளேன் மோட்ல போட்டாலே போதும்... சீக்கிரம் சார்ஜ் ஏறிடும்.
7. லாக் ஸ்கிரீன்ல கண்ட படங்களையும் வைக்கிறதுக்கு பதிலா, உங்க பேர், போன் நம்பர், அட்ரஸ், அல்டெர்னேட் மொபைல் நம்பர் இவற்றை டைப் பண்ணி அதையே ஸ்க்ரீன் லாக்கா செட் பண்ணிக்கிட்டா மொபைல் தொலைஞ்சு போய்ட்டா கூட எடுக்குறவங்க யாரவது உங்களை ஈஸியா கான்டக்ட் பண்ண முடியும். இதுக்காக மொபைல்ல அன்லாக் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.
8. எப்போதும் கைல நம்ம மொபைல் சைஸ்க்கு ஒரு பாலிதீன் கவரை வச்சிருங்க... திடீர் மழை, ஈரம் போன்றவற்றிலிருந்து ஈஸியா காப்பாத்திக்கலாம் நம்ம மொபைல்லை.
9. செல்ஃபி எடுக்கும் போது எதாவது ஒரு நல்ல ஆங்கிள் செட் பண்ணிட்டு கேமராவை ஆன் பண்றதுக்கு கஷ்டமா இருக்கா... வெயிட்... இதோ ஒரு ஈஸி ஐடியா.... உங்க ஹெட் செட்டை கன்னெட் பண்ணிட்டு அதில் இதுக்குன்னே இருக்கும் பட்டனை கிளிக் பண்ணுங்க.. உங்களுக்கு பிடிச்ச அங்கிள்ல போட்டோ ரெடி....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...