1. வாழ்க்கையில் சிறந்த முதலீடு பணம் அல்ல, #நேரம் தான்
2. எளிமையாய் வாழ்வதுதே இனிமை
3.வாழ்க்கையில் #பகிர்தல் என்பது வகுத்தல் கணக்கல்ல. அது ஒரு பெருக்கல் கணக்கு
4. அதிகம் கேட்க இரண்டு காதுகள். குறைவாய் பேச ஒரு வாய்
5. #காலம் எப்போதுமே பதில் சொல்ல தயாராகவே இருக்கிறது. நாம் தான் சரியான கேள்விகளை சரியான நேரங்களில் கேட்டு தெரிந்து கொளலள வேண்டும்
6. எதிலும் #இறுக்கம் நம்மை துரு கொள்ள செய்யும். தளர்த்தி கொள்ளுதல் தழைக்க செய்யும்
7. நாமே தேடி கொண்டால் #தனிமை வரம். கொடுக்கப்பட்டால் சாபம்
8. வாழ்தலால் ஒரு அனுபவம் கிடைக்கும். வாசித்தலால் பலரின் அனுபவம் கிடைக்கும், வாசித்து கொண்டே வாழ்ந்தால் சிறந்த #அனுபவம் கிடைக்கும்
9. நல்ல #நட்பு உலகில் எங்கும் பரந்து கிடக்கிறது. தேர்ந்தெடுக்க தெரியாமல் நட்பை மொத்தமாய் விமர்சிக்க கூடாது .
10.உண்மையும், உழைப்பும் நிச்சயம் #வெற்றி கொள்ளும். அதை பெற சகிப்புதன்மையும் பொறுமையும் மிகவும் அவசியம்
இன்னாளும் நன்னாளாக இறையாசி துணை நிற்கட்டும்.
இனிமை நிறை காலை வணக்கம்....!
No comments:
Post a Comment