காய்கறிகளிலேயே மிகவும் சின்ன காய் என்றால் அது சுண்டைக்காய் தான் . இந்த சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்கள் எல்லாம் நிறைஞ்சு கிடைக்கும் சேமிப்புக் கிடங்கு என்று கூட சொல்லலாம். உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதிலிருந்து கொழுப்பைக் கரைப்பதுவரை நிறைய வேலைகளைச் செய்யக்கூடிய பெரிய அளவிலான மருத்துவ குணங்கள் எல்லாம் இந்த சுண்டைக்காய் தான் செய்யும். எனவே இவற்றை இயற்கையின் வரப்பிரசாதம் என்று கூட சொல்லலாம். தேவையில்லாத செல் பாதிப்புகள் எல்லாம் நம்ம உடம்புல ஏகப்பட்ட வியாதிகளை கொண்டு வந்து சேர்த்திடும். அது போன்ற செல் பாதிப்பு பிரச்சினை எல்லாம் இந்த சுண்டைக்காய் சாப்பிட்டா வராது. நீரிழிவு, இதய நோய் எல்லாவற்றுக்கும் ஏதுவாக உடல் பலவீனமடையும் போது நல்ல ஒரு சுறுசுறுப்பைத் தந்து உடலைத் தேற்றும் சக்தியும் இந்த சுண்டைக்காயில் இருக்கிறது. நோயற்ற வாழ்க்கைக்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் ரொம்ப அவசியம். அதே போல வைட்டமின் A,C,E மாதிரியான சத்துக்களும் நம்ம உடம்புக்கு தேவை, இந்த சுண்டைக்காய்ல இந்த சத்துக்கள் எல்லாம் எக்கச்சக்கமாக இருக்கிறது.
குறிப்பாக இந்த கொரோனா சமயத்துல நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் C உள்ள உணவு பொருளை எடுத்து கொள்ள வேண்டுமென்று டாக்டர் எல்லாம் சொல்வார்கள். அந்த மாதிரி வைட்டமின் C அதிகமா இருக்கும் உணவு இந்த சுண்டைக்காய். ஆரஞ்ச், கொய்யா, பப்பாளி மாதிரியான பழங்கள்ல இருக்குற அளவுக்கு வைட்டமின் C இந்த சுண்டைக் காயிலையும் இருக்கிறது. இந்த சுண்டைக்காய் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீரா வச்சு இருக்கிறது. ரத்தத்தில கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்கள்ல சேர்ந்து ஏதாச்சும் பிரச்சினை ஏற்படுத்தாம தவிர்க்குற மிக அற்புதமான சக்தி இதுக்கு இருக்கிறது.I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment