Monday, May 10, 2021

சீன பாணியில் திமுக அரசு.

 சீனாவில் தனது ஆளுகைக்கு கீழே வைத்துக்கொள்ள வேண்டி திபெத்தில் லாமா வை தாங்கள் தான் நியமனம் செய்வோம், அவருக்கு பஞ்சன்லாமா என்று பெயர் கொடுத்து இருக்கிறோம் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனாலேயே அதன் பூர்வாங்க திபெத்திய லாமாவான தலாய்லாமா நம் இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஆண்டு பல காலம் உருண்டோடிவிட்டது.

இதே போன்ற ஒரு செயலை தற்போதைய தமிழக அரசு கையில் எடுத்து இருக்கிறது.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஸ்ரீரங்கத்திற்கு தனி ஏற்றம் உண்டு.
கோவிலை தவிர்த்து விட்டு பார்த்தால் ஸ்ரீ ராமாநுஜர் தான் நம் நினைவிற்கு வருவார். அவர் கோலோச்சிய அவர் தங்கி இருந்த மடம் சேரன் மடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு அது ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி அமைந்துள்ள இடத்தின் வடக்கு கோபுர வாசல் நேர் எதிரே வடக்கு உத்தரவீதியில் அமைந்திருக்கிறது.
இங்கு ஜீயர் ஸ்வாமியாக எழுந்தருளியிருந்த ரங்கநாராயண ஜீயர் பரமபதித்த காரணத்தால் அந்த இடம் அதாவது பீடம் அலங்கரிப்பவர் இன்றி காலியாக இருக்கிறது.
இதற்கு தான் இந்த இடத்தை நிரப்புவதற்கு தான் தற்போது அறநிலை நிர்வாகம் சார்பில் ஆள் எடுக்க????? அந்த பதவியை நிரப்ப விண்ணப்பம் கோரி இணையத்தில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
இது பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது ஸ்ரீ ரங்கத்தில்.
கடந்த கால நடைமுறைக்கும் இதற்கும் பல விதங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏற்கனவே பலவிதங்களில் பலத்த சர்ச்சையில் சிக்கி திணறிவருகிறது ஸ்ரீரங்கம். அதில் தற்போது இதுவும் சேர்ந்திருக்கிறது.
அறங்காவலர் குழு தலைவராக தற்போது உள்ள பிரபல TVS குழும அதிபர் வேணு சீனிவாசன் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் ஸ்ரீ ரங்கத்தில் உள்ளன. இவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்தார். சரியாக சொன்னால் ஸ்ரீ ரங்கத்தில் மஹாசம்ப்ரோக்ஷனை செய்ய இவரை நியமித்தார். அது முடிந்து பல காலம் உருண்டோடிவிட்டது. இன்னமும் இவர் தான் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இவர் பொறுப்புக்கு வந்த பின்னரே மூலஸ்தானத்தில் பல மாறுதல்களை உண்டு பண்ணி வைத்து இருக்கிறார், இதன் உச்ச பட்சமாக நம்பெருமாளே மாற்றப்பட்டு விட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது. இது குறித்தெல்லாம் நீதிமன்ற விசாரணை இன்னமும் நிலுவையில் தான் இருக்கிறது.
தற்போது இவையெல்லாம் திசை திருப்பும் முயற்சியாக ஆட்சி மாற்றத்தை பயன் படுத்தி மடத்திற்கு, தகுதி வாய்ந்த நபரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..... என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இதில் மேலோட்டமாக பார்த்தால் சட்ட சிக்கல்கள் ஏதும் இல்லாதது போல் தெரிந்தாலும் அதனை தாண்டிய சம்பிரதாய விஷயங்கள் இடியாப்ப சிக்கலை உண்டாக்கி விட்டது.
பேச்சுக்கு வைத்து கொள்வோமே.
இந்த விண்ணப்ப கோரலின் படி தேர்வு செய்யும் நபரை விடுங்கள், தேர்வு செய்வது யார் என்கிற கேள்வி முன் வருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இருக்கும் பட்சத்தில் அரசு தன் விருப்பத்தை சேர்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். நாளாவட்டத்தில் இது அரசு நடத்தும் கட்சியின் சிபாரிசு தான் பொறுப்புக்கு வரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும். பிறகு எப்படி மடத்தில் நிர்வாகம் நடக்கும்???????
ஏற்கனவே சொல்லவே வேண்டாம்....
தற்போது இது போன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆக இதனை நுட்பமாக ஆராய்ந்தோமானால் வேண்டும் என்றே யாரோ திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர் எனலாம்.
சரி எதற்காக???
விஷயம் இருக்கிறது.
அது நீண்ட நாள் ஸ்ரீ ரங்கத்து அடிமணை பிரச்சினை.
ஆம் ஸ்ரீ ரங்கம் முழுமையும் அரங்கம் சொந்து முன் ஒரு காலத்தில்...... இன்று அப்படி அல்ல. காரணம் இந்த அடிமணை தான். மற்ற கோவில்களை போல் இல்லாமல் ஸ்ரீ ரங்கத்தில் ஆறாம் ஏழாம் பிரகாரத்தில் மக்கள் வசிக்கிறார்கள். உத்தர வீதி, சித்தரை வீதியில் தோரோட்டம் நடக்கும் வீதியில் இன்று சாமானிய மக்கள் வசித்து வருகின்றனர்.
முன் காலத்தில் ஆச்சாரியார்களும் அவர்களது திருமாளிகை மட்டுமே இருந்த இடத்தில் இன்று கடை கன்னி வந்து விட்டது. சொன்னால் வெட்க கேடு நாற்பது லட்சம் பெறுமானம் உள்ள இடத்தை இன்று ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்து மாற்று மதத்தவர் வாங்கு வைத்திருக்கும் அவலமும் நடக்கிறது இங்கே.
இவற்றை பத்திரப் பதிவு செய்ய முடியாது என்பது தான் இதில் உள்ள நகைமுரண். காரணம் அந்த இடங்கள் எல்லாம் சூரிய சந்திரர் உள்ள வரை ஆச்சாரியார்களுக்கு பாகவதர்களுக்கும் சொந்தம் என செப்பு பட்டயங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலம் எல்லாம் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வரை கூட செல்கிறது.
அதாவது அத்தனை ஆண்டு காலமாக வழிவழியாக வரும் அவர் தம் சந்ததியினர் வசித்து வருகிறார்கள்.
இதனை மாற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தனர் சிலர். இதற்கு கருணாநிதி தனிச் செயலராக இருந்த சன்முகநாதன் மகள் கவிதா ஸ்ரீ ரங்கத்தில் செயல் அலுவலராக வந்த சமயம் முன்னுரை எழுதினார்.
அந்த அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அந்த அந்த இடம் சொந்தம் என்றார்.
மேலோட்டமாக பார்த்தால் தவறு இல்லை என்பது போல தெரிந்தாலும் இதன் பின்னணியில் படுபயங்கரமான திட்டம் இருந்தது.
அவர் ஸ்ரீ ரங்கத்தில் அடையவளைஞ்சான் வீதியாக வரும் எட்டாம் சுற்று வீதியில் ஒரே இரவில் பலரை குடிசை குடியிருப்புகளை ஏற்படுத்தி சாகசம் செய்தார். உங்கள் புரிகிறது தானே இந்த விஷயத்தின் வீர்யம்.
அன்று அப்படி வந்த பலர் இன்று மெத்தை வீடு வரை கட்டியிருக்கிறார்கள். பல கை மாற்றம் கண்டும் இருக்கிறது. இத்தனைக்கும் இவை எதற்கும் பத்திரப் பதிவு இல்லாமல் தான்......
தற்போது இந்த நிலையில்
இதனை ஆழம் பார்க்கவே மடத்திற்கு விண்ணப்பம் கோரி இருக்கிறார்கள் என்கிறார்கள். இது செய்ய முடிந்தால், அதாவது நியமனம் செய்ய முடிந்தால் இப்பிரச்சினைக்கும் அவர்கள் விருப்பத்திற்குரிய விதத்தில் தீர்வு காண முடியும் என்று நம்புகிறார்கள்.
இவ்வுளவிற்கும் சம்பிரதாயத்தின் பிதாமகன் ஸ்ரீ ராமாநுஜர் எழுந்தருளி இருந்த மடத்திற்குமே முறையான பத்திரங்கள் ஏதும் சட்டரீதியாக கிடையாது.காரணம் இவை அனைத்தும் சற்றேறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு பழைமை வாய்ந்த இடங்கள், ஏன் அதற்கு முற்பட்டதும் கூட. அப்படி இருக்கும் சூழலில் 1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் சட்ட திட்ட வரையறைகள் எங்கனம் இந்த இடத்தில் செல்லும் ஒரு சாரார் விவாதித்து வருகிறார்கள்.
உலகின் மற்றைய நாடுகளில் இது போன்ற பகுதிகளை எல்லாம் நாட்டுடமையாக்கி அரசு தனி கவனம் செலுத்தி பாதுகாத்து பராமரிப்பு செய்து வருகின்றனர். ஆனால் இங்கு மாத்திரமே.........!!!???????
என்ன செய்ய போகிறோம்?????
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...