மனிதர்கள் பலரும் தாங்கள் *சொல்வதும், செய்வதும் மட்டுமே நூற்றுக்கு நூறு சரி என்று தங்கள் கோணத்திலிருந்து எண்ணுகிறார்கள்*... இது சரியா? சற்று சிந்திப்போம்....
ஒவ்வொரு மனிதனும் தான் நினைத்தவாறு அடுத்தவர்கள் நடக்க வேண்டும் தன் சொல்படி மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று தனது கோணத்தை மட்டும் எண்ணுவதால் வாக்குவாதங்கள் அதிகரித்து உறவுகளுக்கிடையே விரிசல்கள் அதிகரித்து வருகின்றன. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை ஆனால் ஐந்து விரல்களும் இணைந்தால்தான் நம்மால் ஒரு வேலையை செய்ய முடியும். அப்படியிருக்கும்போது எல்லோரும் தம்முடைய கருத்துக்கு உட்பட வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமல்ல. *நம்முடைய சொல்லிலும், செயலிலும், முடிவிலும், பார்வை கோணத்தில் கூட கோளாறு இருக்கலாம் அல்லவா!* ஒவ்வொருவருடைய மனவளம் அவரவர் வளர்க்கப்பட்ட விதத்தை ஒட்டியும் பரம்பரைத் தன்மை ஒட்டியும் கல்வியறிவு- உலக அறிவை ஒட்டியும் பக்குவப்படுகின்றன.
எனவே *எந்தவொரு சொல்லிலும், செயலிலும் சுயநல நோக்கோடு ஒரு முடிவுக்கு வந்து அதை நியாயப் படுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் மற்றவர்களுடைய கோணத்தையும் ஆராய்ந்து பார்த்து சமநிலையில் செயல்பட* இன்றைய நாள் எல்லோருக்கும் ஒரு இனிய நாளாக அமையட்டும்.
No comments:
Post a Comment