சென்னை தலமை செயலகம் என்பது இந்திய ராணுவத்தின் சொத்து , அதில் ஒரு புல்லை கூட தமிழக அரசியல்வாதி தொடமுடியாது
தொடுவதாக இருந்தால் சென்னை கோட்டை என்றோ ராம்சாமி மாளிகை, அண்ணா பேலஸ், கருணாநிதி கலைகோட்டை என மாறியிருக்கும்
அது ராணுவத்தின் சொத்து, தமிழக அரசு வாடகைக்குதான் இயங்குகின்றது, அங்கு ஆணி கூட அடிக்க இவர்களால் முடியாது
இப்பொழுது அந்த கோட்டை வடிவில் திமுக தலைவர் கேக் வெட்டியதாக தகவல்கள் பரவுகின்றன, அதை கொடுத்தது ஒரு உபியாம்
இது மிகபெரிய குற்றம், இந்திய ராணுவத்தின் அடையாளத்தை கேக் என வெட்டுதல் என்பது எதிரி நாடு செய்யும் அவமானம்
அந்த பெரும் அவமானத்தை முக ஸ்டாலின் எனும் தமிழக முதல்வர் செய்திருப்பார் என்றால் இது பெரும் அதிர்ச்சி
தேசிய கொடி வடிவில் கேக் வெட்டினால் எவ்வளவு பெரும் அவமானமோ அதுதான் இந்திய ராணுவ அடையாளங்களிலும் கைவைப்பது
இது சாதாரண சிக்கல் அல்ல, ஒரு சாதாரண குடிமகனே இதை செய்தால் நிச்சயம் விடமுடியாது எனும் பொழுது மாநில முதல்வரே செய்தாரா என்பது பெரும் அதிர்ச்சி
விஷயம் எங்கோ சுற்றுகின்றது, இது உறுதிபடுத்தபட்டால் மிகபெரிய எதிர்ப்பு பல இடங்களில் இருந்து தமிழக முதல்வருக்கு வரும்
முதலில் அறிவுகெட்ட உபிக்களிடம் இருந்து தலமை விலகி இருப்பது நலம், கொஞ்சம் கூட முன் யோசனை இல்லா தலமையினை இப்படி ஆர்வ கோளாறில் உபிக்கள் இழுத்துவிடாமல் இருந்தால் இன்னும் நலம்
இந்திய ராணுவ சொத்தினை ஒரு முதல்வர் அவமதித்திருப்பது மிக வன்மையாக கண்டிக்கதக்கது என்பது மட்டும் நிஜம்
(சிக்கலின் வீரியத்தை சொல்வதாக இருந்தால் அறிவாலயம், அண்ணா படம், கோபாலபுரம் வீடு, அறிவாலயம் என வடிவம் செய்து வெட்டுவார்களா? வெட்டினால் விடுவார்களா?
அதே தான் அந்த மனநிலைதான் இந்திய ராணுவத்துக்கும் வரும்
வாடகைக்கு குடியிருக்கு வீட்டை இப்படி விழுங்குவது அவர்கள் வாடிக்கை அதைத்தான் இங்கேயும் செய்கின்றார்கள் என்ற கமெண்டை எல்லாம் தவிர்க்கவும்
கண்டிப்பாக தவிர்க்கவும் )
No comments:
Post a Comment