வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய *கவலையோ, தோல்வியோ* நம்மை நெருங்கும் போது நம்முடைய *மனநிலை எப்படி இருக்க வேண்டும்?* சற்று சிந்திப்போமா...
எத்தகைய புயல் காற்று வாழ்க்கையில் வீசினாலும் சரி நம்மிடம் இருக்க வேண்டிய *மூன்று ஆற்றல்கள்...*
1) எத்தகைய கவலைக்குரிய நிகழ்ச்சி நம் வாழ்க்கையில் நடந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் *(TOLERANCE)* ஆற்றலை நாம் முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2) இந்த துன்ப நிகழ்வால் ஏற்படக் கூடிய விளைவுகளை *(EFFECTS)* சந்திக்க தயாராகும் மனநிலையை அடுத்த படியாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.
3)அடுத்து அந்தப் பிரச்சனையிலிருந்து கடந்து வருவது *(over come)* எப்படி? அதற்கு உண்டான வழிமுறைகள் *( Solutions)* என்ன? அந்த வழிமுறைகளை திட்டமிட்டு *(plan)* செயலாற்றுவது *(execute)* எப்படி?
இந்த மூன்று அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளாமல் *வெறுமனே எல்லோரிடமும் புலம்பி புண்ணியம் இல்லை.* எந்த துன்பச் செய்தியையும் தாங்குவதற்கே நாம் சோர்ந்து விட்டால் அதன் விளைவுகளை நம்மால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்? நாம் மீண்டும் எழ முடியாமல் போய்விடும் அல்லவா?
*பலவீனமான மனதுடன் கவலையில் மூழ்க போகிறோமா?* அல்லது
*பலமான மனதுடன் கவலையை வெல்ல போகிறோமா?* *கவலையை வெல்ல சுயமாக மன வைத்தியம் செய்து கொள்ள* இன்றைய நாள் எல்லோருக்கும் இனிய நாளாக அமையட்டும்.
No comments:
Post a Comment