Friday, May 14, 2021

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னாள் மருத்துவதுறை பேராசிரியராகவும் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்ற கேப்டன் துரைராஜன் ....

 இப்போது அரசுக்கு இருக்கும் பெரும் சவால் அல்லது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பெரும் சிக்கல் என்னவென்றால் தனியார் மருத்துவமனைகள் தங்களால் முடிந்தவரை வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளின் பணத்தை உறிஞ்சிவிட்டு இதற்கு மேல் எதுவும் தேறாது என்கிற நிலைமையில் அவர்களை "அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனால்தான் உயிரை காப்பாற்ற முடியும்" என்று தள்ளி விடுகிறார்கள். 

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு இப்படிப்பட்ட 99 நோயாளிகள் வந்துள்ளனர். 

மருத்துவமனைக்குள் அனுமதிக்கவும் முடியாமல் இருந்த இடத்தில் சிகிச்சையும் இல்லாமல் இப்படிப்பட்ட சிக்கலான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.


இப்படி 'சிக்கலான நிலையில் உள்ள ஒரு நோயாளியை இடம் மாற்றுவது என்றால் ஏற்கனவே அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை,  அடுத்த மருத்துவமனையில் நோயாளி அனுமதிக்கப்படும் வரை ஒரு மருத்துவரை அவசர சிகிச்சைக்காக உடன் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்ப தவறும் மருத்துவமனையை அரசு எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் எடுத்துக்கொள்ளும்' என்கிற உத்தரவை உடனே பிறப்பித்தால் மட்டுமே இப்படிப்பட்ட கொலை பாதகங்களை தவிர்க்க முடியும்.

என்று சொல்லி இருக்கிறார்.


 என்னுடைய முகநூல் சொந்தங்கள் யாரேனும் இப்படிப்பட்ட இக்கட்டை, சிரமத்தை சந்தித்திருந்தால் உடனே என்னுடைய செல்போன் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.

இதுகுறித்து உடனடியாக ஒரு கட்டுரை எழுதி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...