புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட, அனைத்து பணிகளும் இணையதளத்தில் மேற்கொள்ளப்படுவதால், பொது மக்கள், யாரிடமும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.
புதிய ரேஷன் கார்டு பெற, உணவு வழங்கல் துறையின், 'www.tnpds.gov.in' என்ற இணையதளத்தில் மட்டும், விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, மத்திய அரசின், 'ஆதார்' எண் உள்ளிட்டவை பதிவேற்றுவது அவசியம்.உணவு வழங்கல் துறை அதிகாரிகள், விண்ணப்பதாரரின் முகவரியில் ஆய்வு செய்து, தனி சமையல் அறையுடன் வசிப்பதை உறுதி செய்து, கார்டு வழங்க பரிந்துரைப்பர்.

சென்னையில் உணவு வழங்கல் உதவி ஆணையர்கள், மற்ற மாவட்டங்களில், வட்ட வழங்கல் அதிகாரிகள், ரேஷன் கார்டுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர். அந்த விபரம், உடனே விண்ணப்பதாரருக்கு, எஸ்.எம்.எஸ்., -தகவலாக தெரிவிக்கப்படுகிறது.பின், ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு, பயனாளிகளிடம் வழங்கியதும், அதை காட்டி, ரேஷன் பொருட்களை வாங்கலாம்.
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வாக்குறுதி அளித்த, கொரோனா நிவாரணம், 4,000 ரூபாய் மற்றும் குடும்ப தலைவிக்கு, மாதம் 1,000 ரூபாய் உரிம தொகை பெறுவதற்காக, புதிய ரேஷன் கார்டு கேட்டு, பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.அவர்களிடம் கார்டு வழங்க, அதிகாரிகள் லஞ்சம் கேட்பது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, முகவரி மாற்றம் என, அனைத்து பணிகளும், இணையதளத்தில் மட்டும் மேற்கொள்ளலாம். அதில், எளிய முறையில் விண்ணப்பிக்கலாம். அதிகாரியிடம் எத்தனை நாள் விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என்பதையும், விண்ணப்பத்தை ரத்து செய்ததற்கான காரணத்தையும் அறிய முடியும்.சட்டசபை தேர்தலால், ரேஷன் கார்டு வழங்கு வதில் தாமதம் ஏற்பட்டது.இனி, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு கார்டு விரைந்து வழங்கப்படும். எனவே, கார்டுக்காக விண்ணப்பதாரர்கள், யாரிடமும் லஞ்சம் கொடுக்கக் கூடாது.லஞ்சம் கேட்பவர்கள் குறித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment