புதிய சட்டமன்றம் கூடியுள்ளது திமுக அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள்
இதில் பல அமைச்சர்களின் பின்னணிதான் சுவாரஸ்யமானது
நிதி அமைச்சர் தியாகராஜன் பற்றி திமுகவின் தமிழ்நாட்டு மன்மோகன்சிங் அளவுக்கு அள்ளிவிட்டுகொண்டிருக்கின்றனர் உபிக்கள், அன்னார் ஒரு பன்னாட்டு வங்கியில் அதாவது லீமென் பிரதர்ஸ் வங்கியில் பெரும் பதவியில் இருந்தது உண்மை
அன்னாரின் வழிகாட்டலில் அந்த வங்கி திவாலாகி இவர் அலறி அடித்து 2007ல் ஓடிவந்ததும் உண்மை, திவாலான வங்கிக்கு வழிகாட்டியவர்தான் இப்பொழுது தமிழ்நாட்டு நிதி அமைச்சர் என்கின்றது சில செய்திகள்
இந்த பொன்முடி மேலான வழக்கு, ரகுபதி மேலான சர்ச்சைகளெல்லாம் தமிழகம் அறிந்தது
செந்தில்பாலாஜி கருணாநிதியாலே கட்டம் கட்டப்பட்டிருந்தவர் என்பது யாவரும் அறிந்தது
துரைமுருகன் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு துரைமுருகனாக பல வடிவங்களில் நின்றவர்
ஆக முன்பு ஊழலில் சாதனை படைத்த அமைச்சர்களும் இனி சாதனை படைக்க போகும் அமைச்சர்களுமாக அமைச்சரவை தொடங்குகின்றது
அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்பதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, இதே ககன் தீப் சிங் பேடிதான் தாதுமணல் முதல் பல விவகாரங்களுக்கு களத்தில் வந்தவர், முடிவு என்னாயிற்று?
அரசியல்வாதிகளை மீறி அதிகாரிகளால் எதையும் செய்யமுடியாது என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை
இப்போதைக்கு பெரும் சவால் கொரோனா, அதை எப்படி இந்த சபை அணுகுகின்றது என்பதைத்தான் தமிழகம் நோக்கி கொண்டிருக்கின்றது.
இதில் சில சுவாரஸ்ய அம்சங்களும் உண்டு
சபாநாயகராக அப்பாவு என்பவரும் பாஜக எதிர்கட்சி தலைவராக நயினார் நாகேந்திரனும் சந்திக்கும் காட்சிகள் கிளாசிக் ரகம்
"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..."
No comments:
Post a Comment