Friday, May 7, 2021

ஆனால் இன்று??

 " ¶அரிசி அட்டைதாரருக்கு மட்டும்தான் லாக்டவுனால் பாதிப்பா?? மற்றவர்கள் எல்லாரும் பிச்சை எடுக்கனுமா?? கொடுப்பதே 4000 ரூவா.. இதுல பாரபட்சம் வேறயா??

¶சாதாரண கட்டணப் பேருந்துகளில் மட்டும் பெண்களுக்கு இலவஸம் என்பது கேலிக்கூத்து.. இப்படி அறிவித்து விட்டு சிறப்பு கட்டண பேருந்துகளை அதிகமாக விட்டு சம்பாதிக்க துடிக்கிறார்கள்.. வன்மையாக கண்டிக்கிறேன்.. விரைவில் போராட்டம் நடைபெறும்.
¶ஆவின் பால் லிட்டருக்கு 3ரூ குறைத்ததாக சொல்லியுள்ளது கண்துடைப்பு.. இதன் மூலம் ஆவின் உற்பத்தியை குறைத்து தட்டுப்பாடு ஏற்படுத்தி தனியார் கம்பெனி பால்களை விற்க அரசு பொட்டி வாங்கி விட்டது... தனியார் பால்களுக்கு 5 ரூபாய் குறைத்து விற்க உத்தரவிடவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும்.."
இன்று எ.க.தலைவராக #சுடாலின் இருந்தால் இதைத்தான் கேட்டு பாய்ந்திருப்பார். திருமா கதறியிருப்பார்.. வைகோ குதறியிருப்பார்..ஊடகங்களும் நிமிடத்துக்கு ஒருமுறை அதை போட்டு போட்டு சொம்படிக்கும்.. வேற வழியே இல்லாமல் எடப்பாடி ""நாங்கள் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது.. அனைவருக்கும் தருகிறோம்.." என பணிந்திருப்பார்.. அரசு இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் பட்டிருக்கும்.. பிறகு அதையும் காரணமாக சொல்லி பலவீனமான அரசு,கையாலாகா அரசு என மக்களிடம் சொல்வார்கள்..
ஆனால் இன்று??
ஊடகங்கள் இதை வரலாற்று சாதனை என புகழ்ந்து தள்ளுகின்றன..
தமிழன் நாளை முதல் நம் கஷ்டமெல்லாம் தீர்ந்ததாக புளகாங்கிதம் அடைகிறான்.. வேற வழி..?? வோட் போட்டதால மீசைல மண்ணு ஒட்டலன்னுதானே சொல்லி ஆக வேண்டும்..
#குறிப்பு: முதல்வர் காப்பீட்டு திட்டப் படி தனியார் மருத்துவமனைகளில் கொரானாவுக்கு இலவஸ சிகிச்சை என்பது ஏற்கனவே உள்ளதாக அதிமுகவினர் பொறுமுகிறார்கள்..
ஆக... நாலு கையெழுத்தும் இனி நடக்கும் நடைமுறையை பார்த்துதான் பலன் உள்ளதா இல்லையா என்பது தெளிவாகும்..
அப்ப..அந்த நூறு நாள்ல செயல் படுத்தும் ஐந்தாவது கையெழுத்து?? என்று கேட்கிறீர்களா??
அந்த ஃபைல்ல #மறந்து_போயி கையெழுத்து போட்டதாகக் கூட சொல்லலாம்.. யார் கண்டது??😄😄
இதையெல்லாம் கேள்வி கேட்கும் நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இல்லை.. ஏனென்றால் கேள்வி யார் கேட்பது.. என்ற விஷயத்துக்காக அடித்துக் கொள்ளவே நேரம் பத்தலை அவர்களுக்கு...😄
ஆக.. மூக்கே இல்லாதவிங்க ஊர்ல மூளி மூக்கன் ராஜ்ஜியம் தான் இனி..
வாழ்க தமிழகம்.....👍

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...