ஆரம்ப காலத்தில் புல்லாங்குழல் கலைஞர் திரு.சுதாகர் அவர்களை தனது கச்சரிகளுக்கு வாசிக்க செய்தார், அதன் பின்பு தனது படங்களுக்கும் புல்லாங்குழல்
கலைஞனராக பயன்படுத்திக்கொண்டார்.
ராஜா தனது பாடல்களுக்கு அதிகபட்சமாக ஒரே ஒரு புல்லாங்குழல் கலைஞரை மட்டுமே பயன்படுத்துவது வழக்கம்,
சுதாகர் அவர்களுக்கு புல்லாங்குழலிற்கான இசைக்குறிப்புகளை எழுத கற்றுக்கொடுத்ததும் ராஜாதான்.
பின்னாளில் சுதாகர் மேற்கொண்டு புல்லாங்குழலில்
சிறந்து விளங்க, ஹாளந்தை சேர்ந்த #வர்ஜினியா_நின்கி என்ற பெண்மணியை தனது வீட்டிலே பயிற்சி அளிக்க சொல்லி ஒரு புல்லாங்குழல் பயிற்சியளிக்க
நியமித்தார்.
#நின்கி புல்லாங்குழலில் ஒரு சிறந்த விற்பன்னர். இசைக்குறிப்புகளை பார்த்த மாத்திரத்தில் அடுத்த நொடியே எந்தவித பயிற்சியும் இல்லாமல் வாசிக்கும் வல்லமை கொண்டவர். இப்படி ஒருவரை மட்டுமே பயன்படுத்திய ராஜா பாரதிராஜாவின் படத்திற்கு இசைக்கோர்ப்புகள் ஜெமினி ஸ்டுடியோவில் நடைபெற்றது,
அந்த ஒரு பாடலுக்கு இரட்டையகள் புல்லாங்குழல் வாசித்தார்கள் சுதாகர் மற்றும் நின்கி.
இன்றளவும் இந்த பாடலுக்கு ஒரு மகத்துவம் உண்டு என்றால் அது மிகையல்ல, அந்த பாடல் தான் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது காலை".
அது மட்டுமல்ல ராஜா அதிகமாக மற்றுமொரு இசைக்கருவியையும் பயன்படுத்தினார், அதன் பெயர் "ரிக்கார்டர்" அதன் வடிவம் புல்லாங்குழல் போன்று தோற்றமளித்தாலும் அதன் இசை அலாதியாகவும் புல்லாங்குழலின் ஓசையிலிருந்து சற்றே வேறுபட்டிருக்கும். அதன் இசையை 'உதிரிப்பூக்கள்" படத்தில் இடம்பெற்ற "அழகிய கண்ணே" என்ற பாடலில் முதலாவது இடையிசையில் இடம்பெற்று தனித்துவத்தை காட்டியிருக்கும்.
தேடல் தொடரும்..............
அன்புடன் உங்கள்
Ilayaraja Isai Pasarai
இளையராஜா இசைப்பாசறை

No comments:
Post a Comment