Friday, May 14, 2021

வாழுகின்ற வார்த்தைகள். . vs வீழுகின்ற வார்த்தைகள்.

 மருத்துவர் ஒரு பெண்மணிக்குச் சில மருந்துகளைப் பரிந்துரைத்து விட்டு,

"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..
"எவ்வளவு காலம் டாக்டர் ? , நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்தப் பெண்மணி
டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..
*சாகும் வரை,
வாழும் வரை*
என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன.
ஆனால் *சாகும் வரை* என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் *எதிர்மறை எண்ணம்* எழுகிறது.
ஆனால் *வாழும் வரை* என்ற சொற்களில் ஆறுதல் தரும் *நேர்மறை எண்ணம்* ஏற்படுகிறது.
சொற்களில் என்ன இருக்கிறது,? அதனைப் புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்று வாதாடலாம்.
ஆனால்....
சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...
அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாகப் பேசலாம்.
அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளைத் தவிர்க்கலாம்.
*Every word has its power choose them carefully.*
உடலுக்கு *Insulin* எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு *இன்சொல்லும்* அவ்வளவு முக்கியம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...