Monday, August 15, 2022

இப்போ 2000, 500 செல்லாது என்று வரணும். அப்போ இருக்கு வேடிக்கை.

 அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தேன்.. இரவு 09.15 இருக்கும்.. கை கால், முகம் அலம்பி விட்டு சாப்பிட உட்கார்ந்தேன்... டி.வி... யில் நீயூஸ் சேனால் மாற்றி 9.30 மணி செய்தி கேட்க ஆரம்பித்தேன்.. 9.36 மணிக்கு மோடியின் உரை.. பாரதத்தில் ரூ500.. ரூ1000 நோட்டுக்குத் தடை. கையில் இருக்கும் இருப்புக்களை பேங்க்கில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். பேங்க் அக்கவுண்டில் கட்டியும் புது வெளியீடு ரூபாய்களை பெற்றுக் கொள்ளலாம்.. என்ற செய்தி.

ஆமாம் எட்டாண்டுகளுக்கு முன் நவம்பர் 08 ந்தேதி 2016 ஆம் ஆண்டு... செய்தி கேட்டதும் உணவை கூட உண்ண முடியவில்லை.. நிலம் வாங்கவும், வீடு ரிப்பேர் என சில லகரங்கள் வீட்டில் வைத்திருந்தேன் அத்தனையும் ரூ.500, 1000 தாள்கள். அன்று கூட பேங்கிலிருந்து சில லகரங்கள் வாங்கும் போது அதில் ரூ100 தாள் 10 கட்டு தந்ததையும் கேஸியரிடம் சண்டை போட்டு மேனேஜர் வரை போய் ரூ1000 கட்டாக வாங்கி வந்தேன்.
இதை எல்லாம் கேட்டவுடன் ரூபாய் நோட்டுக்களை எப்படி, எப்போது மாற்ற போகிறோம் என்ற நினைப்பில் இரவு முழுவதும் தூக்கமில்லை.. அத்தனையும் கணக்கில் உள்ள பணமானாலும் மீண்டும் போங்கில் போட்டு மாற்ற மாத கணக்காயிவிடும். இதனால் தடைப்படும் வேலைகளை நினைக்கும் போதே பதற்றம் தொற்றிக் கொண்டது. நடு இரவு என்று கூட பாராது நண்பர்கள், உறவுகள் என விசாரிப்பு மற்றும் ஆலோசனைகளால் போன்கள் அனைத்தும் ஏகப்பட்ட பிஸி...
மனம் நொந்து கொண்டே தினமும் அலைந்து மெல்ல மெல்ல கூட்டத்தில் நின்று இரு மாதங்களாக பாடுபட்டு புது நோட்டுகளாக மாற்றியதை இன்று நினைத்தாலும் பதற்றமாக இருக்கு... மேலும் பேங்க் வாலாக்களின் அராஜகமும் சொல்லி மாலாது... நானும் இந்த வெறியில் அந்த சமயத்தில் பிரதமரை வசைபாடித்தான் வந்தேன். போக போக நாடு இருந்த நிலை பாக். கள்ள நோட்டுகள், தீவிரவாதிகள் பணப்பழக்கம், அரசியல்வாதிகளின் கறுப்புபணம், அராஜகம் அனைத்தையும் தடைசெய்ய பிரதமர் மோடி எடுத்துள்ள திட்டம் என்பதை உணர்ந்ததும், ஊடங்கள் வாயிலாக தெரிந்து கொண்ட பல விசயங்களால் பட்ட வலிகள் அனைத்து பறந்துதான் போயின.... அன்றியிருந்து மெல்ல மெல்ல மோடியின் நலம் விரும்பியாக மாறித்தான் போனேன்...
இன்று 75 வது சுந்திரதினம் விழா... வழக்கத்தை விட அதிக அளவில் பாரத மக்கள் கொண்டாடி மகிழ்வதை காணும் போது மோடியின் மகிமையை உணர முடிகிறது... அன்று காமராஜரை தொலைத்தோம் 50 ஆண்டுகள் தேடி இன்று மோடியை கண்டோம்.. மோடியை தொலைத்தால் இன்னும் கண்டு கொள்ள 100 ஆண்டு காலமாகும்...
வாழ்க பாரதம்... ஜெய் ஹிந்த்....
May be an image of 1 person and money

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...