இன்று வாயை வாடகைக்கு விட்டு வயறு வளர்த்த அரசியல் வியாபாரி இறந்து விட்டான் -
அவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் சொல்லும் அதே வேளையில்....
அவனை பல பத்திரிக்கைகள் - தமிழ் கடல் என்று போற்றி எழுதுகின்றன ..
இவர் இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை கற்றறிந்தவர். மேலும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமைமிக்கவர்.
எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும் தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.
செந்தமிழ் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்ய வல்லப, பொங்கு தமிழ் விருது போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலையர் இருந்தால் போதும் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும் என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்டவர்
தமிழ், வடமொழி இருமரபிலும் தேர்ந்த புலமை பெற்றவராகத் திகழ்ந்த காரணத்தால், இலக்கண உலகில் செம்பதிப்புகளையும், பயன்பாட்டுப் பதிப்புகளையும் உருவாக்கிய மிகச்சிறந்த பதிப்பாசிரியராக தி.வே.கோபாலையரால் புகழ்பெற முடிந்தது.
=======================================
இவரது வாழ்நாள் சாதனையாகத் திகழ்வது, சென்னை தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட (24.10.2005) "தமிழ் இலக்கணப் பேரகராதி' பதினேழு தொகுப்புகள்தான்.
இவரது பிருமாண்ட தமிழ் புலமையை அறிய - இந்த சுட்டியில் சென்று ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரு ரெண்டு பக்கம் படிச்சு பாருங்க யாரு கடல் என்று தெரியும்
===========================================
இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொல்காப்பியம் செம்பதிப்பு - 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. கம்பராமாயணம் தொடர்பாக ஏழு நூல்களை எழுதியுள்ளார். மணிமேகலை ஆங்கில மொழிபெயர்ப்புக்கும், சேனாவரையம் பிரெஞ்சு மொழி பெயர்ப்புக்கும், "சோழர் கலைப்பணி' ஆங்கில நூலின் தமிழாக்கத்துக்கும் இவரின் பன்மொழிப் புலமை பயன்பட்டுள்ளது.
புதுவையில் வாழ்ந்த தி.வே.கோபாலையர், 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் - அவரது மகள் வீட்டில் - எனது மனைவியின் சித்தப்பா - சந்தக்கவி ராமஸ்வாமி அவர்களை நாலாயிர திவ்ய பிரபந்த சில பாடல்களை படிக்க சொல்லி கேட்டு கொண்டே காலமானார்.
No comments:
Post a Comment