ஐயா அப்துல் கலாம் அவர்கள் சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் அங்கே இருக்கும் போது திடீரென்று ஒரு மாணவன் ஏன் நீங்கள் திருமணம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்?
திடீரென்று சில வினாடிகள் அமைதியான கலாம் ஐயா இந்த கேள்விக்கு பதிலேதும் கூறாமல் உங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.
மேலும் அவருடன் வேலை செய்யும் விஞ்ஞானிகள் கல்யாணத்தைப் பற்றி பேசும்போது சிறிது நேரம் அமைதியாக இருந்து கேட்ட கேள்வியை திசை திருப்பி வேறு வேலைகளில் ஈடுபட்டு விடுவார்.
மேலும் வற்புறுத்திக் கேட்டால் அமைதியாக இருந்து விடுவார் என சக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வாஜ்பாய் அவர்கள் வாழ்க்கையில் திருமணம் சம்பந்தமாக நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். அப்போது அவர் ராஷ்டிரிய சர்வோதய சங்கத்தில் முழு ஈடுபாட்டுடன்உழைத்து வந்தார் வாஜ்பாய் பெற்றோர் அவருக்கு கல்யாணம் செய்து வைக்கும் மும்முரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் வாஜ்பாய் அவர்கள் தன்னுடன் இயக்கத்தில் இருக்கும் நண்பர் வீட்டில் போய் மூன்று நாட்கள் மறைமுகமாக ஒளிந்து கொண்டார் சாப்பாடு தண்ணீர் எல்லாம் நண்பரின் வழியாக சென்றுகொண்டிருந்தது.
எல்லோரும் மாப்பிள்ளை காணாததால் கல்யாணத்தை நிறுத்தி வைத்து விட்டனர்.
இதனை இந்த இயக்கத்தில் ஈடுபட்டிருந்த வாஜ்பாய் நண்பரின் மகன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் மேலும் வாஜ்பாய் தாயார் அவர்களிடம் உங்கள் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கவில்லை என்று நிருபர் கேட்டார்
அதற்கு அவர்கள் எனக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் ஆசைதான் ஆனால் என் மகன் கல்யாணம் செய்து வைத்து விட்டால் நான் குடும்பத்திற்காக வாழ வேண்டும் நான் சுதந்திரமாக நாட்டிற்கு உழைக்க முடியாது எனவே எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று என் மகன் கூறிவிட்டார் என்று குறிப்பிட்டார்.
பின்னர் இரண்டு தலைவர்களும் நாட்டின் பலத்தை காட்டுவதற்கு அணு ஆயுத சோதனை நடத்தினர்
மேலும் வாஜ்பாய் அவர்கள் கலாம் ஐயாவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து மேலும் இந்த நாட்டிற்கு அப்துல் கலாம் அவர்களுக்கு மிகப்பெரிய பெருமையை அளித்தார். இருவரும்நட்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தனர்.
இருவருமே கல்யாணம் செய்துகொள்ள விரும்பாமல் தத்தமது துறைகளில் விருப்பங்களில் முழு ஈடுபாட்டுடன் மனதுடன் தனது சுதந்திரத்தை இழக்க விரும்பாமல் நாட்டிற்காக உழைத்தனர்.
கல்யாணம் செய்துகொள்வது அவருடைய விருப்பத்தை பொருத்தது
எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் நாம் வாழும் முறையை பொருத்து தான் அது வரமா சாபமா நம் எண்ணத்தை பொறுத்தும் வாழும் முறையைப் பொறுத்தும் வாழ்க்கை அமையும். தத்துவ அறிஞர் பெர்னாட்ஷா விடம் நீங்கள் மறுமுறை பிறந்தால் எப்படிப் வாழவேண்டும் விரும்புவீர்கள் என்று ஒருவர் கேட்டார்
அதற்கு பெர்னாட்சா என் விருப்பப்பட்ட வாழ்க்கையை நான் வாழவேண்டும் என்று கூறினார். இதுதான் உண்மை .
No comments:
Post a Comment