44ஒலிம்பியாட் நம் மகாபலிபுரத்தில்
நடப்பது பெருமையாக இருக்கல்லவா!
ரஷ்யாவில் நடக்க வேண்டிய விழா
அங்கு போர் நடப்பதால் நமக்கு
அதிர்ஷம் அடிச்சிருக்கு.
இந்த விளையாட்டை கண்டுபிடிச்சதே
நம் நாடு தான். ஆனா நாம்தான்
எதுக்கும் ரைட்ஸ் வாங்க மாட்டோமே!!!
6ஆம் நூற்றாண்டிலேயே குப்தர் காலத்
தில் அஷ்டபாதா என் இதனை கூறுவர்.
எட்டு எட்டான சதுரங்க பலவகையாக
இருந்தது.
கி.பி 6ஆம் நூற்றாண்டில் சவாலான
விளையாட்டை கண்டு பிடித்தால் பரிசு
தருவதாக இந்திய அரசர் சொன்னதால்
சிசர் இபின் தாகிர்தான் இதனை
கண்டு பிடித்தாகச் சொன்னார்.
9ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவும் 15ஆம்
நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் இந்த
விளையாட்டு வளர்ச்சி அடைந்தது.
ரஷ்யர்கள் இந்த விளையாட்டை
மிகவும் விரும்பினார்கள்.
எப்பொழுதும் போல் சீனா நாங்கதான்
கண்டு பிடித்தோம் என் அடம் பிடித்தது.
ஆனா இந்தியாவில் தான் சரித்திர
ஆதாரம் இருக்கிறது.பொதுவாக இது
ராஜாக்கள் விளையாடும் விளையாட்டு.
போர் வியூகங்களை லாவகமாக கடைப்
பிடிக்க நம் நாட்டில் கண்டு பிடிக்கப்
பட்டது.
கீழடியில் தந்தத்தினால் ஆனா சதுரங்கக்
காய்கள் தற்சமயம் கண்டு பிடிக்கப்
பட்டது.இவ்வளவு சிறப்பு நம் தமிழகத்தில்
இருக்கையில் இங்கே சதுரங்கப் போட்டி
நடப்பது சிறப்புத் தானே.
இந்தியிவின் கிராண்ட் மாஸ்டர் 74பேரில்
41பேர் அதிகமாக தமிழகத்தில் தானா
இருக்காங்க. ஆஹா எவ்வளவு பெருமை
நமக்கெல்லாம்.விஸ்வநாதன் ஆனந்த்
நம்பர் 1 செஸ்பிளேயர்.அவரால் நம்
நாட்டுக்குப் பெருமை.
ஆனா இதனை எப்படி எல்லாம் விளை
யாடலாம் என் புத்தகம் எழுதியவர்
ஸ்பெயின் நாட்டை சார்ந்தலூயிஸ் ராமிரே ஆவார்
மாமல்லபுரத்தில் 14நாள் நடக்கும் செஸ்
போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு
சிறப்பு உணவை தயார் பண்ணித்தர
இருக்கிறது நம் தமிழகம்.
ஒருமுறை வழங்கப்பட்ட உணவு திரும்ப
வழங்கப்பட மாட்டாது இந்த14நாட்களும
350உணவுமுறைகள் தயாரிக்கப்படு
கிறது. இதைத்தயாரிப்பவர் 75வயது
நிறம்பிய சமையல் கலைநிபுணர்
தல்வார் தா என்பவர்.
No comments:
Post a Comment