Monday, August 15, 2022

வஸந்தகாலங்கள்.

 ஆடி பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து மக்கள் இது என்ன என்று வேடிக்கை பார்த்து சென்று இருப்பார்கள் . அவர்களுக்கு தெரியாது ஒரு காலத்தில் திருவண்ணாமலை நகர மக்கள் மட்டுமல்ல சுற்றி இருக்கும் கிராமப்புற மக்களும் தேடி வந்து கலந்து கொள்ளும் திருவிழா பூ பல்லாக்கு திருவிழா .

பூ மாரியம்மன் பூ பல்லாக்கு திருவிழா நடந்த காலங்களை திருவண்ணாமலை மக்கள் அசைபோட்டு பார்த்தால் எவ்வளவு அற்புதமான திருவிழா , அது தரும் மகிழ்ச்சி நாளடைவில் குறைந்து குறைந்து பலர்க்கு மறந்து போகும் நிலைக்கு காலம் மாறி இருக்கிறது .
" கள்ளைக்கடை மூலை" என்று திருவண்ணாமலை மக்களால் அழைக்கப்படும் இடம் எங்களால் மறக்க முடியாத இடம் .
அங்கு வருடத்தில் ஆடி பவுர்ணமி நாளில் இன்னிசை கச்சேரி தவறாமல் நடைபெறும் . இப்போது இன்னிசை கச்சேரி என்று பெயர் வைத்து பாடல்களை பாடுகிறார்கள் .மேடையில் சிலர் மட்டுமே இருக்கிறார்கள் வாசிக்கிறார்கள் .எல்லாமும் கம்யூட்டர் மயம் . ஆனால் அப்போது அப்படி இல்லை . திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு , பல்லவன் இசைக்குழு நிகழ்ச்சி என்றால் வயலின் வாசிப்பதற்கு மட்டுமே பத்து பேர் மேடையில் இருப்பார்கள் என்றால் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் .
எங்கள் பள்ளி நாட்களில் இரவு நேரத்தில் கால்களை நீட்ட கூட இடம் இல்லாமல் தரையில் அமர்ந்து விடிய விடிய பாடல்களை கேட்ட காலங்கள் அது . பக்தி பாடல்கள் , திரை இசை பாடல்கள் நேரிடையாக வாசித்து பாடுவதை கேட்க ஒரு குரூப் ஆக ஓடிப் போய் முன்பே இடம் பிடிப்போம் .
இன்றைய நவீன யுகத்தில் ஒரு பாடலை கேட்க அல்லது பார்க்க நிறைய வசதிகள் வந்து விட்டாலும் , அன்று தரையில் அமர்ந்து ரசித்து கேட்ட பாடல்கள் தான் பெரும்பாலும் மறக்க முடியாத நினைவுகளோடு மனதில் தங்கி விடுகிறது .
அதுபோலத்தான் திருவிழாக்களும் . இந்த பூ மாரியம்மன் பூ பல்லாக்கு திருவிழா பழைமையான நினைவுகளை தேடிப் பார்க்க வைத்து இருக்கிறது .
அன்று அந்த தருணங்களில் என்னோடு இருந்த நண்பர்கள் இன்று இல்லை . மீண்டும் அது போன்ற காலங்கள் வரப்போவதும் இல்லை .
என்னுடைய வாழ்வில் ஆறுதலான விஷியம் தரையிலும் திரையிலும் நான் ரசித்து கேட்ட பாடல்களை தந்தவரோடு அவ்வப்பொழுது அருகில் இருப்பது .ஆன்மீகத்தில் அவரை குருவாக நினைத்து பயணிப்பது .
(திருவண்ணாமலை பற்றி எழுதி ரொம்ப நாளாச்சு .)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...