திமுக கட்டுமரம் கைக்கு போனபின்பு ஒரு முறை கூட மீண்டும் ஆட்சிக்கு வந்ததே இல்லை! கட்டுமரம் மக்களை முட்டாள் எப்படி ஆள்வது என்பதற்கு கொடுத்த உழைப்பில் கால்வாசியாவது மக்களுக்காக உழைத்திருந்தால் இது நடந்திருக்காது. அந்த திமுக ஒருபோதும் அதன் மீது நம்பிக்கையால் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டதே இல்லை. அது எதிர்கட்சி மீது இருந்த ஏதாவது ஒரு வெறுப்பை உரமாக்கியே திமுக வென்றது, வென்றபோதெல்லாம் தின்றது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, December 4, 2022
அண்ணாவால் ஆரம்பம் அண்ணாமலையால் முடிவு!?!
கட்டுமரம் ஒரு சிறந்த நிர்வாகி என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒரு போதும் அவரிடம் அது இருந்ததில்லை. ஆனால் அவர் பயன்படுத்திய ஒரே மெக்கானிஷம் என்பது தேனை எடுத்த உனக்கொரு பங்கு, எனக்கொரு பங்கு என்ற கூட்டுக்கொள்ளை! அந்த தேனை எடுத்தவன் புறங்கையை நக்கும் உரிமை அவனுக்கு உண்டு என்று தலைவனே சொல்லிவிட்டதால், அவன் புறங்கையை மட்டுமல்ல தேனையும் நக்கிவிட்டான்.
இந்த ஆட்சியில் அந்த தேனையும் காலி செய்யும் பெருச்சாளிகளுக்கு முக்கியமான பதவிகளை, துறைகளை, கொடுக்காமல் அதை பங்காளி அதிமுகவில் இருந்து வந்த புறங்கையை மட்டும் நக்கும் புதிய அடிமைகளுக்கு கொடுத்தது, பரம்பரை கூட்டாளிகளுக்கு கோபத்தை உண்டாக்கியது. விளைவு தாறுமாறாக பேசி சர்வாதிகாரியின் தூக்கத்தை கெடுத்தார்கள். இன்று வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.
பொதுவாக மேல் முதல், கீழ் வரை அறித்து பழகிப்போன உபிஸ்களுக்கு, பயந்து மக்கள் படியளந்தார்கள் அந்த காலத்தில். இல்லாவிடில் வெச்சு செஞ்சிடுவாங்கன்னு ஒரு பயம் இருந்தது. ஆனால் அது நடுவில் இருக்கும் விசுவாச கூட்டளிகளுக்குள் விரிசல் வந்துவிட்டதால் அது உடைந்தது.
இரண்டாவதாக அப்படி நடக்கும்போது கூட்டாளி அதிமுக அடக்கி வாசிப்பான். அதனால் குட்டி பெருச்சாளிகளுக்கு பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அண்ணாமலை அதற்கு மிகப்பெரிய தடையானதால், அது பொய்த்துப்போனது. அதற்கு பதிலால் அவர்கள் நம்பியது அடிமை மீடியாவை. அதற்கு மிகப்பெரிய பிரச்சினை ஆனது சோஷியல் மீடியா.
அதன் விளைவு பங்காளி அதிமுகவே மீசையை முறுக்க வேண்டிய கட்டாயம். அதனால் ஒரு பொம்மை ஆள்கிறது என்று போட்டுடைக்க வேண்டிய கட்டாயம். காலம் காலமாக காத்துக்கொண்டு இருந்த ஓநாய்கள், வாய்ப்பை பயன்படுத்த முடியவில்லை, ஏனெனில் எதிரே இருப்பது அண்ணாமலை என்ற சிங்கம்.
குடும்பத்தில் இருக்கும் கிணற்று தவளைகள் அடுத்த தவளையை அனுமதிப்பதில்லை. அதனால் ஒட்டுமொத்தமாக கூடாரம் காலி ஆகிறது. இப்போது இருக்கும் ஓனாய்களும், நரிகளும், கழுதை புலிகளும் எப்போது தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கு ஆபத்து என்ற நிலை வருகிறதோ அப்போது, அது அணி மாறும், அல்லது ஒதுங்கிப்போகும், அல்லது ஓங்கியும் அடிக்கும்.
அது 2024 பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் சின்னாபின்னமாக தொடங்கி, 2026 தேர்தலோடு முடிவுக்கு வரும். அந்த கட்சியில் ஏற்படும் பிளவால் அதன் உதய சூரியன் மறையும் சூரியன் என்றாக வாய்ப்புகள்தான் அது உண்மையாக மக்களுக்கான கொடுக்கும் விடியல். அதில் பிரிந்தவர்கள் ஒரு பங்கு சீமானுடனும், மறு பங்கு அதுமுகவுடனும், மீதி இருப்பது போதும் என்று அரசியல் சன்னியாசம் போகும்.
அந்த விடியலுக்கு மோடி என்ற பீரங்கி மட்டுமல்ல, அண்ணாமலை என்ற குண்டும் பெரும்பங்காற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் காங்கிரஸ் முக்திக்கு பப்பு எவ்வளவு முக்கியமோ, திமுகவின் முடிவுரைக்கு சுடலையும் முக்கியமே!
நீயும் பொம்மை நானும் பொம்மை, நினைச்சு பார்த்தால் எல்லாம் பொம்மை?!?
அதற்கு வித்திடும் 2023 ஆம் ஆண்டை வரவேற்போம், அண்ணாமலைக்கு வலிமை சேர்ப்போம்!
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment