Sunday, September 10, 2017

சசி_ஆட்சியில்_அமருவதை_ஜெ_வின்_ஆன்மா_விரும்பவில்லை...!!!!!



கேரள ஜோதிடர், வேங்கட சர்மா என்பவர் ஜெயலலிதா ஆன்மாவை தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி வருகிறாராம்.
ஜெயலலிதா வின் ஆன்மாவுடன் இவர் தொடர்பு கொண்டு சொல்லும் செய்திகள் இவை.
ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உயிரை காக்க வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லாததையும், ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை ஆளுநர் உள்பட யாரையும் சசிகலா தரப்பு அனுமதிக்காததையும் கண்ட பொதுமக்களுக்கு அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக நம்புகின்றனர்.
ஜெயலலிதா இயற்கையாக மரணிக்க வில்லை என்றும் அவரது தொண்டர்கள் கருதுகின்றனர். மக்கள் சந்தேகிப்பது உண்மை என்பதை நிருபீக்கும் வகையில் சன் நியூஸ் சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதிடர் கூறுகையில், ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் கடந்த 3 மாதங்களாக பேசி வருகிறேன். அவர் மரணம் இயற்கையானது அல்ல.
அவர் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இருப்பார் ஜெயலலிதா ஆன்மா, இன்னும் போயஸ் கார்டனிலும், நினைவிடத்திலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆன்மா அமைதி அடைய எவரும் எதுவும் செய்யவில்லையாம். அதனால் இன்னும் சிறிது காலம் கழித்து, தான்விரும்பியதை நிறைவேற்றிவிட்டு அது சென்றுவிடும் என்கிறார்.
ஜெயலலிதா மரணம் இயற்கையானது அல்ல. ஜெயலலிதா இறந்து போனதாக சொல்லப்பட்ட நாளுக்கு 2 மாதம் முன்பே அவர் இந்த உடலைத் துறந்துவிட்டார். ஆனால், அவர் இறந்தது தெரியாமல், லட்சக்கணக்கான தொண்டர்கள், கோயிலில் அவர் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தும், அவருக்காக தெய்வத்திடம் முறையிட்டதினாலும், அவருடைய ஆன்மா அங்கே சித்தர் நிலையில் குடி கொண்டது . அந்த ஆன்மாவுக்கு போகர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டினார்கள். பின்னர் அவர்கள் சென்றுவிட, இப்போது இடைக்காட்டுச் சித்தரின் வழிகாட்டுதலில் ஜெயலலிதா ஆன்மா உலவுகிறதாம்.
தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக சசிகலா குடும்பத்தினர் மீது கோபத்துடன் இருக்கிறதாம் ஜெ. ஆன்மா. அதனால், வம்ச நாசம் செய்துவிட்டுத்தான் போவேன் என்று சொல்கிறாராம். சசிகலாவை ஒதுக்கி வைப்பதையே ஜெயலலிதா ஆவி விரும்புகிறதாம். தனக்கு பணிவிடைகள் செய்ததையும் உடன் இருந்ததையும் மட்டுமே தான் விரும்பியதாகவும், பதவிக்கு அவர் வருவதை தாம் விரும்பவில்லை என்றும் சொல்கிறதாம் ஜெ. ஆன்மா!
எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோரை, ஓரளவு நம்பிக்கைக்கு உரியவர்களாக, விசுவாசிகளாகக் கருதுகிறாராம். எனவே இந்த ஆட்சியை கலைக்க விடமாட்டேன் என்று கூறும் ஜெ. ஆன்மா, அடுத்த தேர்தலிலும் என் ஆட்சியே அமையும் என்று உறுதியாகக் கூறுகிறதாம்.
Image may contain: 1 person, text
தினகரன் குறித்து எந்தப் பேச்சையும் கேட்க மறுத்து , தலையைத் திருப்பிக் கொண்டு, ஆத்திரப்படும் வகையில் பெரு மூச்சினை விடுகிறதாம். 
அதே நேரம், தீபா மீது கோபத்திலும் அதிருப்தியிலும் உள்ளதாம். 
தனது வேதா இல்லத்தையும் தன் சொத்துகளையும் யார் அனுபவிக்க நினைத்தாலும், அவர்களை வம்ச நாசம் செய்து விடுவேன் என்று கூறுகிறதாம்!
மக்களால் நான் மக்களுக்காக நான் என்று இன்றும் சொல்லிக் கொண்டிருப்பதாகவும், தான் ஆசைப்பட்டதில் பத்தில் இரண்டுதான் நிறைவேறியது என்றும், ஏழைகளுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டதாகவும், எளியவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் அது முடியாமல் போனது என்றும் ஜெ ஆன்மா கூறியதாம்.
ஜெ. ஆன்மா பழிவாங்கும் பட்டியலில் 30 பேர் வரை உள்ளனர் என்று கூறும் வேங்கட சர்மா, இன்னும் ஒரு வருடத்துக்குள் பாருங்கள், எத்தனை பேரை காவு வாங்கும், எப்படி வம்ச நாசம் ஏற்படும் என்பதை! என்று முத்தாய்ப்பாக முடித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...