Wednesday, September 6, 2017

மகாளய_பட்சத்தில்_வரும்_திதியின்_பலன்கள் !!!!

🌟 பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.
🌟 மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.
🌟 நமது மூதாதையர்களின் ஆசிர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.
🌟 இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.
எந்த திதியில் என்ன பலன் :
🌟 முதல்நாள் அன்று பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.
🌟 இரண்டாம் நாள் அன்று துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள்.
🌟 மூன்றாம் நாள் அன்று திரிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
🌟 நான்காம் நாள் அன்று சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளால் தொல்லை இல்லாமல் வாழலாம்.
🌟 ஐந்தாம் நாள் அன்று பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துக்கள் வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
🌟 ஆறாம் நாள் அன்று சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும் புகழும் கிடைக்கும்.
🌟 ஏழாம் நாள் அன்று சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் சிறந்த பதவிகளை அடையலாம். உத்யோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
🌟 எட்டாம் நாள் அன்று அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.
🌟 ஒன்பதாம் நாள் அன்று நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
🌟 பத்தாம் நாள் அன்று தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
🌟 பதினொன்றாம் நாள் அன்று ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலையில் வளர்ச்சி அடைவார்கள்.
🌟 பனிரெண்டாம் நாள் அன்று துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
🌟 பதின்மூன்றாம் நாள் அன்று திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.
🌟 பதினான்காம் நாள் அன்று சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.
🌟 அடுத்து பதினைந்தாம் நாள் அன்று மகாளய அமாவாசை நாளாகும்.
🌟 மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.
No automatic alt text available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...