தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர், ஜி.கே.மூப்பனார். 1996ல், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தஞ்சையில், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற, தனிக்கட்சியை துவக்கினார். அந்த கட்சிக்கு, சைக்கிள் சின்னத்தை, தேர்தல் ஆணையம் வழங்கியது. அப்போது, நடிகர் ரஜினியின் ஆதரவு, சைக்கிள் சின்னத்திற்கு கிடைத்ததால், அந்த தேர்தலில், துவங்கிய சில நாட்களிலேயே, த.மா.கா., பெரும் வெற்றி பெற்றது.
இதன்பின், 2001ல், மூப்பனார் மறைந்ததும், கட்சிப் பொறுப்பு வாசன் வசம் வந்தது. அவர், த.மா.கா.,வை காங்கிரசுடன் இணைத்தார்.
இதனால், சைக்கிள் சின்னம் முடக்கப்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மீண்டும், த.மா.கா.,வை துவக்கினார் வாசன். அத்துடன், சைக்கிள்
சின்னத்தை பெற, தேர்தல் ஆணையத்தில் வெகு நாட்களாக போராடினார்.கடந்த சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து, வாசன் கட்சி போட்டியிடும் போது, தென்னந்தோப்பு சின்னம் தான் ஒதுக்கப்பட்டது. தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், தஞ்சையில் போட்டியிடும் வாசன் கட்சிக்கு, மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டதால், வெற்றி வாய்ப்பு நிச்சயம் கிட்டும் என, அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment