லோக்சபா தேர்தலில், கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பின், நிருபர்களுக்கு, அவர் பேட்டி அளித்தார்.அதே பேட்டியை, மறைந்த கருணாநிதி அளித்திருந்தால், எப்படி இருக்கும்?
இதோ அந்த கற்பனை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி, எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது?
கருணாநிதி: நிச்சயமாக, வெற்றி பெற போகும் சின்னத்தில் தான் போட்டியிடும். அந்த சின்னம் என்னவென்பதை, அந்த கட்சி தலைவர் சொல்வார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை பற்றி?
கருணாநிதி: 40 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறிக்கும் அறிக்கையாக இருக்கும். நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அத்தனை அம்சங்களும் அதில் இருக்கும். தேர்தல் அறிக்கையாக மட்டும் அல்ல; தேசத்தின் தலையெழுத்தையே மாற்றும் அறிக்கையாக இருக்கும்.
இதோ அந்த கற்பனை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி, எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது?
கருணாநிதி: நிச்சயமாக, வெற்றி பெற போகும் சின்னத்தில் தான் போட்டியிடும். அந்த சின்னம் என்னவென்பதை, அந்த கட்சி தலைவர் சொல்வார்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை பற்றி?
கருணாநிதி: 40 தொகுதிகளிலும் வெற்றி கனியை பறிக்கும் அறிக்கையாக இருக்கும். நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ, அத்தனை அம்சங்களும் அதில் இருக்கும். தேர்தல் அறிக்கையாக மட்டும் அல்ல; தேசத்தின் தலையெழுத்தையே மாற்றும் அறிக்கையாக இருக்கும்.
தி.மு.க., வேட்பாளர் பட்டியல், எப்போது அறிவிக்கப்படும்?
கருணாநிதி: வேட்பாளர்கள்தேர்வு செய்யப்பட்டதும் அறிவிக்கப்படும். உங்கள் மூலமாக தான், அதை மக்களிடம் தெரிவிப்போம்.
தி.மு.க., தேர்தல் அறிக்கை, லோக்சபாவுக்கும், சட்டசபைக்கும் சேர்த்து இருக்குமா?
கருணாநிதி: ஒன்று, டில்லியிலும், இன்னொன்று, சென்னையிலும் அல்லவா இருக்கிறது; அதை எப்படி சேர்க்க முடியும்.
இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல், எப்போது வெளியிடப்படும்?
கருணாநிதி: இரண்டு பட்டியல்களும் இடைவெளி விட்டு வெளியிடப்படும். முதலில், லோக்சபா; பின், சட்டசபை.
கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பிரசாரத்தை மேற்கொள்வீர்களா?கருணாநிதி: நாங்கள், பல ஆண்டுகளாக இணைந்து தான் இருக்கிறோம். இணைந்திருப்பது தானே கூட்டணி. நாகர்கோவிலிலேயே துவங்கி விட்டோமே, நீங்கள் பார்க்கவில்லையா?
விவசாயிகளுக்கான அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா?
கருணாநிதி: விவசாய பெருமக்கள் மட்டுமல்ல. ஏழை, எளிய, பின்தங்கிய, அனைத்து ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கும், தேர்தல் அறிக்கையில் அறிவிப்புகள் இருக்கும்.
உங்களது பிரசார பயணத்தை, எப்போது துவங்க இருக்கிறீர்கள்?
கருணாநிதி: தி.மு.க., துவங்கிய நாளிலேயே பிரசார பயணத்தை துவங்கி விட்டேன். சமூக நீதிக்கான பிரசார பயணத்தில் தான் இப்போதும் இருக்கிறேன். ஒடுக்கப்படும் மக்களுக்கு சம உரிமையும், கல்வி, வேலைவாய்ப்புகளில், முன்னேற்றமும் கிடைக்க, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, பிரசாரத்தை நடத்தி வருகிறோம். இந்த தேர்தலுக்கான பிரசாரத்தை கேட்டீர்கள் என்றால், நாகர்கோவிலில், 13ம் தேதியே துவங்கி உள்ளோம்.
சமூக வலைதளங்களில், உங்களுக்கு எதிரான, ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறதே?
கருணாநிதி: அது, சமூகத்துக்கு எதிரானவர்களின் பிரசாரமாக இருக்கலாம்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம், நாட்டில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது, வருகிற தேர்தலில் எதிரொலிக்கும் என்று நினைக்கிறீர்களா?
கருணாநிதி: வரும் தேர்தலுக்கு பின், பாலியல் கொடுமைகள் நிச்சயம் எதிரொலிக்காது. அப்போது, தி.மு.க., மக்களை காக்கும் பொறுப்பில் இருக்கும். தற்போது, தமிழக அரசு, தம்பி சபரீசன் மீதும், உடன்பிறப்புகள் மீதும் வழக்கு போட்டு, பிரச்னையை திசை திருப்ப பார்க்கிறது. இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, தமிழக மக்கள் இனியும் பார்த்து கொண்டிருக்க மாட்டார்கள்.
மீதமிருக்கும், மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று, நீங்கள் தொடர்ந்த வழக்கில், இரண்டு வார அவகாசம், தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அதை, நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
கருணாநிதி: அந்த மூன்று தொகுதிகளுக்கும், சாவகாசமாக தேர்தலை நடத்தலாம் என்ற எண்ணத்தில், தேர்தல் ஆணையம், அவகாசம் கேட்டிருக்கலாம்.
No comments:
Post a Comment